‛‛கணவரின் இறுதி சடங்கில் குழந்தை பெற்ற பெண்’’.. 10 ஆண்டு தவமிருந்து வாரிசை பார்க்காமலே மறைந்த இளைஞர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரத்தில் திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார். அவரது இறுதிச்சடங்கில் கதறி அழுத நிறைமாத கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் ஆன தம்பதிகள் குழந்தை பெற்றெடுப்பதை பெரும் வரமாக பார்க்கின்றனர். இதில் பல தம்பதிகளுக்கு திருமணம் ஆன முதல் ஆண்டு அல்லது 2வது ஆண்டில் குழந்தை பிறந்து விடுகிறது. ஆனால் சில தம்பதிகள் குழந்தை பிறப்பு தாமதாகிறது.

viluppuram marriage child funeral

இந்த சமயத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளின் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்படியான பிரச்சனையை விழுப்புரம் தம்பதியின் வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மகிழ்ச்சி நீண்டகாலம் நீடிக்கவில்லை.

அதாவது 10 ஆண்டுகளுக்கு பிறகு மனைவி கர்ப்பிணியான நிலையில் குழந்தை பாக்கியம் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்த குடும்பத்தில் விதி விளையாடி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு அவரது கணவரின் இறுதி சடங்கின்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

விழுப்புரம் மாவட்டம் வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சாரதி. இவரது மனைவி சத்தியபிரியா. இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. குழந்தை பாக்கியத்துக்காக சாரதி - சத்தியபிரியா தம்பதி ஏங்கி வந்தனர். இந்நிலையில் தான் சமீபத்தில் சத்தியபிரியா கர்ப்பமானார். 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமானதால் சத்தியபிரியா மகிழ்ச்சியடைந்தார். அதேபோல் தனது பெயரை சொல்ல வாரிசு வருவதை நினைத்த சாரதியும் உற்சாகமானார்.

சத்தியபிரியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் தான் தற்போது சாரதி- சத்தியபிரியா தம்பதியின் வாழ்க்கையில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது 10 ஆண்டுக்கு பிறகு பிறக்கும் குழந்தையை பார்க்காமலேயே சாரதி இறந்துவிட்டார். சாரதி இரும்பு கம்பியை தூக்கி சென்றபோது அது மின்கம்பியில் உரசியது. இதனால் மின்சாரம் பாய்ந்து சாரதி பலியானார்.

சாரதியின் உடலை பார்த்து சத்தியபிரியா கதறி அழுதார். சாரதியின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டபோது சத்தியபிரியா கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. மேலும் திடீரென்று சத்தியப்பிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. கணவர் சாரதியின் இறுதிச்சடங்கின்போது சத்திய பிரியா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் கூட அவரது கணவர் மின்சாரம் தாக்கி இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+