நள்ளிரவில் அலறிய மனைவி, மாமியார்.. கடப்பாறையால் முருகன் செய்த பயங்கரம்.. கள்ளக்குறிச்சி ஷாக்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே மனைவி, மாமியாரை கொன்ற ஆட்டோ ஓட்டுநர், மகளையும் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முருக்கம்பாடி காலனியை சேர்ந்தவர் சரோஜா வயது 50 இவருடைய மகள் மகாலட்சுமி வயது 33.

மகாலட்சுமியை திருக்கோவிலூர் அடுத்த தேவிகாபுரத்தில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவருடன் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கள்ளதொடர்பு

கள்ளதொடர்பு

இவர்களுக்கு 2 ஆண் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். மகாலட்சுமி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கோபித்து வந்தார்

கோபித்து வந்தார்

இதனால் முருகனின் வீட்டிலிருந்து மகாலட்சுமி தனது சொந்த ஊரான முருக்கம்பாடியில் உள்ள தாயாரான சரோஜா வீட்டிற்கு வந்திருக்கிறார். இந்நிலையில் முருகன் தனது மாமியார் வீட்டிற்கு வந்து மகாலட்சுமி தன்னுடன் சேர்ந்து வாழும்படி வற்புறுத்தி அங்கேயே இரவு தங்கியுள்ளார்.

கடப்பாறையால் தாக்கு

கடப்பாறையால் தாக்கு

மேலும் குடிபோதையில் மனைவி அணிந்திருந்த நகையை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நகை தர மறுக்கவே நள்ளிரவு 1மணியளவில் மனைவி மற்றும் மாமியாரை கடப்பாரையால் குத்தி உள்ளார். மகள் மோனிஷா (11)வையும் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிஒடிவிட்டார்.

மனைவி மாமியார் பலி

மனைவி மாமியார் பலி

அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் மணலூர்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் மூவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா, மகாலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மோனிஷா தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு கிறார்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இதுப்பற்றி தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் நேரில் வந்து ஆய்வு செய்து அங்கு உள்ள அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார் . மாவட்ட துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் மணலூர்பேட்டை காவல் துறையினர் இந்த கொலை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும் அச்சம்

பெரும் அச்சம்

உயிரிழந்த சரோஜா, மகாலட்சுமி ஆகியோரின் உடல்கள் திருவண்ணாமலை அரசு பொது மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தப்பியோடிய முருகனை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவு நடந்த இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+