மறக்காதீங்க மக்களே.. திமுக பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - அண்ணாமலை பேச்சு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : திமுக செய்த தவறுகளையும், பாஜக செய்த நல்லதையும் மக்கள் மறந்து விடக்கூடாது என்று பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் வாக்கு சேகரித்தபோது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

Recommended Video

    மறக்காதீங்க மக்களே.. திமுக பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - அண்ணாமலை பேச்சு

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

    பிரச்சாரம் தீவிரம்

    பிரச்சாரம் தீவிரம்

    வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவார கால அவகாசமே உள்ள நிலையில் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தமிழகம் முழுவதும் வாக்காளர்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார். இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    பாஜக அண்ணாமலை

    பாஜக அண்ணாமலை

    குறிப்பாக பாஜக அண்ணாமலை தொடர்ந்து மூன்று நாட்களாக மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார் இன்று விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்த அவர், திமுக செய்த தவறுகளையும், பாஜக செய்த நல்லதையும் மக்கள் மறந்து விடக்கூடாது என்று பேசினார். விழுப்புரம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட அளவில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் செய்தார்.

    ஆட்சி மீது சலிப்பு

    ஆட்சி மீது சலிப்பு

    அப்போது, விழுப்புரம் மாவட்ட மக்களுடைய வாழ்க்கைத் தரத்தில் இதுவரை எந்த மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று பேசினார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திமுக அரசு மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு சலிப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.பாஜக மட்டுமே திமுக செய்யும் தவறுகளை தட்டிக்கேட்டு, ஊழலை தடுத்து நிறுத்தி வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே, ஊழல் இல்லாத நிர்வாகத்தை நிலைநாட்ட முடியும்.

    ஸ்டிக்கர் ஒட்டும் திமுக

    ஸ்டிக்கர் ஒட்டும் திமுக

    மத்திய அரசின் எந்த திட்டமாக இருந்தாலும், அதில் திமுக ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கொண்டு வந்ததாக பரப்புரை செய்கிறது. தமிழகத்தில் தற்போது சாதி வாரியாக மக்களைப் பிரித்து அரசியல் செய்யப்பட்டு வருகிறது. திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பி மக்கள் யாரும் ஏமாந்து வாக்களித்து விடாதீர்கள். அவர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். மற்றபடி அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் பேசினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+