"நான் இங்கேயே இருக்கேன்! போய் அமைச்சர் பொன்முடியை வரச் சொல்லு".. பிரச்சாரத்தில் சிவி சண்முகம் ஆவேசம்
விழுப்புரம்: திமுகவினர் ஆட்சிப் பொறுப்பேற்று எட்டு மாத காலத்தில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கட்டப்பஞ்சாயத்து அராஜகத்தில் மட்டுமே ஈடுபடுகின்றனர் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றம்சாட்டினார்.
Recommended Video
விழுப்புரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க., ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் நேரம்
இந்த 8 மாத தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தார்கள்? தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? அந்த வாக்குறுதியை நிறைவேற்ற திட்டங்கள் வகுத்திருக்கிறார்களா? என்று மக்கள் சிந்தித்து பாருங்கள். கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.

நீட் தேர்வு
மேலும் நீட் தேர்வு விஷயத்தில் இந்த மாநில மக்களையும் மாணவர்களையும் ஏமாற்றி திமுக நாடகம் நடத்தி வருகிறது என குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர் திமுக ஆட்சி பொறுப்பேற்று 8 மாத காலத்தில் அக்கிரமங்கள் மற்றும் அராஜகங்களில் ஈடுபட்டு வருகிறது. தற்போது சென்னை, கோவை ஆகிய இடங்களில் வீடு கட்டவோ வாங்கவோ முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினார்.

சிவி சண்முகம்
அப்போது கூட்டத்தில் ஒருவர் சிவி சண்முகத்தை பார்த்து குரல் கொடுத்ததால் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அப்போது உடனே அங்கிருந்த காவல்துறையினர் அந்த நபரை பிடித்து இழுத்து சென்று விட்டனர். பின்னர் பேசிய சிவி சண்முகம், இந்த மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆள் நாங்கள் இல்லை.

பொன்முடியை வர சொல்
போய் அமைச்சர் பொன்முடியை வரச் சொல்லுங்கள். ஏன் முடிந்தால் முதல்வர் ஸ்டாலினும் வரட்டும். நான் இரவு 12 மணியானாலும் இங்கேயே இருக்கிறேன் என ஆவேசம் காட்டினார். மேலும் பேசிய அவர் காவல் துறை ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. திமுக மீதும் காவல் துறையினர் மீதும் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி












Click it and Unblock the Notifications