"கைது.." நள்ளிரவில் பரபரத்த சி.வி.சண்முகம் வீடு.. குவிந்த தொண்டர்கள்.. கடைசியில் ஒன்றுமில்லை!
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை நள்ளிரவில் கைது செய்வதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டு வாசலில் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களது வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது போல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கள்ளஓட்டு போட்ட திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி பிடித்துக் கொடுத்ததாக கடந்த 21 ஆம் ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை உடனடியாக விடுவிக்க வேண்டும், அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். அப்போது அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிவி சண்முகம்
விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில் ஆட்சி பொறுப்பிற்கு வந்த ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை மறந்துவிட்டு அதிமுகவை எப்படி அழிப்பது என 24 மணி நேரமும் சிந்தித்து கொண்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர்கள்
அப்படி அவர் வகுத்த திட்டப்படி முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், கைது செய்வதுமாகும். இப்படியெல்லாம் செய்தால் அதிமுகவை அழித்துவிடலாம் என நினைக்கிறார். மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தை ஆளும் அப்போது திமுக இன்று செய்வதற்கு எதிர்வினையை அனுபவிப்பார்கள். திமுக அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுகிற ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர்.

அதிமுக அஞ்சியது இல்லை
கைதுக்கு அதிமுக என்றைக்கும் அஞ்சியது இல்லை, பலமுறை சிறை பார்த்தவர்கள் தான் அதிமுகவினர். என்னை கைது செய்ய வாருங்கள், தயாராக இருக்கிறேன். உங்கள் பூச்சாண்டியை கண்டு அதிமுகவினர் பயப்பட மாட்டோம். அடுத்ததாக சி.வி. சண்முகம்தான் கைது செய்யப்படுவார் என செய்திகள் வந்தன. பார்த்தேன். கைது பண்ணிக்கோ.

சட்டை வேட்டியுடன் ரெடியா இருக்கேன்
விடியல் காலையில் வருவதெல்லாம் வேண்டாம். அப்பாயின்மென்ட் சொல்லிட்டே வரலாம். வேட்டி சட்டை கட்டி ரெடியாக இருக்கிறேன் என பேசியிருந்தார். இந்த நிலையில் சி.வி. சண்முகம் கைது செய்யப்படலாம் என நேற்று இரவு 10 மணிக்கு மேல் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது.

சிவி சண்முகம் வீடு குவிந்த தொண்டர்கள்
இந்த தகவலை வைத்து திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் நள்ளிரவில் 200- க்கும் மேற்பட்டோர் சேர்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்னர் சிவி சண்முகம் வந்து, அது போல் ஒன்றும் நடக்கவில்லை. இங்கு கூட்டம் கூடி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம், கைது நடவடிக்கையை நான் சந்தித்து கொள்கிறேன் என தொண்டர்களை கலைந்து போகுமாறு கூறினார். அதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications