விக்கிரவாண்டி தொகுதிக்குள் தகுதியான ஆளே இல்லையா? லோக்கல் திமுகவில் வெடித்துக் கிளம்பிய முணுமுணுப்பு!
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் தொடர்ந்து வெளியூர் வேட்பாளர்களையே திமுக நிறுத்தி வருவதால் லோக்கல் திமுகவினர் மத்தியில் முணுமுணுப்புகள் இருந்து வருவதாகத் தெரிகிறது.
2011 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. திமுக சார்பில் 2011, 2016 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும், 2019 இடைத்தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெளித் தொகுதியை சேர்ந்தவர்களே விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார்கள்.

வெளியூர் வேட்பாளர்கள்: கடந்த 2011 சட்டசபை தேர்தலில் ராதாமணி, விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டார். ராதாமணி, வானூர் தொகுதிக்கு உட்பட்ட கலிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர். விக்கிரவாண்டி தொகுதிக்குள் வசிக்காத ராதாமணி வேட்பாளர் ஆக்கப்பட்டது லோக்கல் கரை வேட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றார்.
அதன் பிறகு 216 சட்டசபை தேர்தலில் மீண்டும் ராதாமணி திமுக சார்பில் களமிறக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடி சப்போர்ட்டில் மீண்டும் சீட் பெற்றிருந்தார் ராதாமணி. அந்த தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் ராதாமணி.
புகழேந்தி: விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக இருந்த ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்ததால் 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, பொன்முடியின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி, இடைத்தேர்தல் வேட்பாளராக திமுக சார்பில் களமிறக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், அத்தியூர் திருவாதியைச் சேர்ந்த புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர். அவரை விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் ஆக்கியதை உள்ளூர் உடன்பிறப்புகள் வரவேற்கவில்லை. அந்த தேர்தலில் அதிமுகவின் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக எம்.எல்.ஏ புகழேந்தி: கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிட்ட புகழேந்தி 9 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பெற்று பெற்றார். இந்நிலையில் அவர் காலமானதால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி உருவானது முதலே அந்தத் தொகுதியில் திமுக, வெளியூர் வேட்பாளரை நிறுத்தியது அங்குள்ள மக்களிடையேயும், கட்சியினரிடையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகமாக வேலை பார்க்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலிலாவது விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.
உள்ளூர் திமுகவில் முணுமுணுப்பு: திமுக சார்பில் போட்டியிட விக்கிரவாண்டி தொகுதிக்குள் தகுதியான ஒருவர்கூட இல்லையா? கடந்த 4 தேர்தல்களிலும் வெளித் தொகுதியைச் சேர்ந்தவர்களையே தலைமை வேட்பாளராக நிறுத்தியது. இந்த முறையாவது தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுக்கப்படுமா புலம்பல்களும் திமுகவினர் மத்தியில் தொகுதிக்குள் ஒலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனினும், மறைந்த புகழேந்தியின் மகன் செல்வகுமார் அல்லது மருமகள் பிரசன்னா இருவரில் ஒருவர் விக்கிரவாண்டியில் போட்டியிடக்கூடும் எனக் கூறப்படுகிறது. அவர்கள் இல்லை என்றால், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications