சிவி சண்முகத்தை மீண்டும் வீழ்த்த தயாராகும் திமுக.. மயிலம் தொகுதிகளில் பரபரக்கும் தேர்தல் பணிகள்!
விழுப்புரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை மயிலம் தொகுதியில் வீழ்த்த திமுக தலைமை தயாராகி வருகிறது. விழுப்புரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது ரிஸ்க் என்று சிவி சண்முகம் தொகுதி மாறும் சூழலில், அங்கு திமுகவினர் இப்போதே பம்பரமாய் சுழன்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி இறுதி செய்த கையோடு, தொகுதி பங்கீட்டை முடிக்கவும் இரு கட்சிகளும் ஆலோசித்திருக்கின்றன. இதனிடையே மயிலம் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோத தயாராகி வருகின்றன.

ஏற்கனவே அதிமுக ராஜ்ய சபா எம்பி சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் இருந்து மாறி மயிலம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மயிலம் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை சிவி சண்முகம் தனது அண்ணன் ராதாகிருஷ்ணன் மூலமாக வழங்கினார். இதனை அறிந்த மயிலம் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவான அன்புமணி ஆதரவு சிவக்குமார், விக்கிரவாண்டி தொகுதிக்கு மாற முடிவு எடுத்துவிட்டார்.
மயிலம் தொகுதியில் போட்டியிடுவது என்று சிவி சண்முகம் சில மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்து தேர்தல் பணிகளை தனது ஆதரவாளர்கள் மூலமாக மேற்கொண்டு வந்தார். தனது அண்ணன் ராதாகிருஷ்ணன் மூலமாக அடுத்தக் கட்ட பணிகளையும் சிவி சண்முகம் முடுக்கிவிட்டுள்ளார். இந்த நிலையில் சிவி சண்முகத்தை மீண்டும் தோற்கடிக்க முடிவு செய்து திமுகவினரும் பணிகளை தொடங்கியுள்ளனர்.
மயிலம் தொகுதி இன்னும் எந்தக் கட்சிக்கு என்றே முடிவாகாத நிலையில், நமது சின்னம் எங்கள் சின்னம் உதயசூரியன் என்று சுவர் விளம்பரங்களை திமுகவினர் வரைய தொடங்கிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் சிவி சண்முகத்திற்கு எதிராக போட்டியிடுவதற்கான வேட்பாளர்களையும் திமுக கொம்புவீசி விட்டிருக்கிறது.
ஏற்கனவே திமுகவில் இணைந்த மதிமுக முன்னாள் எம்எல்ஏ மாசிலாமணி போட்டியிட தயாராக துண்டு போட்டு பணிகளை செய்து வருகிறார். அதேபோல் ஜெகத்ரட்சகன் ஆதரவாளரான செஞ்சி சிவா, விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சேகர் ஆகியோர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ப மயிலம் தொகுதி திமுக நிர்வாகிகளும் பணிகளில் ஆர்வமாகவும், நம்பிக்கையாகவும் உள்ளனர்.
சிவி சண்முகத்தின் சொந்த ஊரான ஒளவையார் குப்பம் மயிலம் தொகுதியில் தான் வருகிறது. கடந்த தேர்தலில் திமுக நிர்வாகி லட்சுமணனிடம் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சிவி சண்முகம் தோல்வி அடைந்தார். இதனால் உற்சாகம் அடைந்த திமுக, லட்சுமணனுக்கு கூடுதல் பொறுப்புகளை கொடுத்தது. அதன்பின் லட்சுமணன் தொகுதியில் பம்பரமாக சுழன்று வருகிறார். இதனால் சிவி சண்முகம் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், தொகுதி மாறுவது உறுதியாகி இருக்கிறது.
-
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன?












Click it and Unblock the Notifications