விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. 82.48 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இங்கு திமுக, பாமக, நாம் தமிழர் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் 82.48 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 2021ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் அவர் காலமானார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

Vikravandi by election by election villupuram

இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில்மொத்தம் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட்டுள்ளது. பாமக சார்பில் வேட்பாளராக சி அன்புமணி நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா களமிறங்கி உள்ளார். இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

vikravandi by election by election villupuram

இதனால் இந்த தொகுதிக்கு திமுக, பாமக, நாம் தமிழர் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இதுதவிர பிற சிறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் களமிறங்கி உள்ளனர். மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருக்கிறார்கள். இந்த தொகுதிக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இதையடுத்து இன்று (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு தொடங்கி உள்ளது. தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க தொடங்கி உள்னர். தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1,355 பேர் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி, நுண் பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுதவிர 110 வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காலையில் தேர்தல் தொடங்கிய உடன் 5 வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அதன்பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இந்நிலையில் தான்விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 12.94 சதவீத ஓட்டுகள் பதிவானுது. மொத்தம் 2.37 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் 30,667 பேர் ஓட்டளித்தனர். அதன்பிறகு மதியம் ஒரு மணி நிலவரப்படி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 50.95 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்து உள்ளது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 77.3% வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஜுலை 13 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலவரத்தை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+