இத பண்ணலைனா 50 கோடி செலவு செஞ்சாலும் அதிமுக ஜெயிக்க முடியாது.. சி.வி.சண்முகம் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம் : அதிமுகவின் உட்கட்டமைப்பினை உறுதிபடுத்தவில்லை என்றால் 50 கோடி செலவு செய்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும், இன்னும் நாலரை ஆண்டுகள் உள்ள நிலையில் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் அனைவரும் ஒருமனதாக ஒன்றினைந்து செயல்பட்டு நிர்வாகிகளை தேர்தெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

Recommended Video

    இத பண்ணலைனா 50 கோடி செலவு செஞ்சாலும் அதிமுக ஜெயிக்க முடியாது.. சி.வி.சண்முகம் எச்சரிக்கை

    அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறிய குட்டி ஸ்டோரி அரசியலில் பல கதைகளை கிளப்பி விட்டுள்ளது. தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதுதான் ஒரு நல்ல தலைமைக்கு அழகு என அவர் கூறியது சசிலகாவைத்தான் என யூகம் கிளம்ப எக்கச்சக்க டென்ஷனானார் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

    இதற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஓபிஎஸ் சசிகலாவை குறிப்பிட்டு அப்படி பேசவில்லை என்றும், ஒருவேளை பேசியிருந்தாலும் அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்பதையும் குறிப்பிட்டார். இருந்தாலும் மழை விட்டாலும் தூரல் விடாத கதையாக சசிகலா எனும் புயல் அதிமுகவைச் சுற்றியே மையம் கொண்டுள்ளது. போதாக்குறைக்கு கழக பொதுச்செயலாளர் என லெட்டர்பேர்டில் பேடியிலேயே பீதி கிளப்பி வருகிறார்.

    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

    இந்நிலையில் அதிமுகவின் உட்கட்டமைப்பினை உறுதிபடுத்தவில்லை என்றால் 50 கோடி செலவு செய்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும், இன்னும் நாலரை ஆண்டுகள் உள்ள நிலையில் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் அனைவரும் ஒருமனதாக ஒன்றினைந்து செயல்பட்டு நிர்வாகிகளை தேர்தெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் கழக அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர்கள் ஓ. எஸ். மணியன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    நாலரை ஆண்டுகள் உள்ளது

    நாலரை ஆண்டுகள் உள்ளது

    அதில் பேசிய முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய போது, கழக, ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர்கள் வழிகாட்டுதல் படி செயல்பட்டு பொறுப்பாளர்களை தேர்தெடுக்கவேண்டும் எனவும், பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல் நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட்டு ஒரு மனதாக தேர்தெடுக்கவேண்டும் எனவும் கூறினார்.

    50 கோடி செலவு செய்தாலும்

    50 கோடி செலவு செய்தாலும்

    இன்னும் நமக்கு 41/2 ஆண்டுகள் உள்ளது எனவும், மக்கள் மனதில் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி தான் நமக்கு நல்லது செய்வார்கள் என நினைத்து வாக்களிப்பார்கள் எனவும், ஆனால் எம்எல்ஏ எம்பி தேர்தலில் மக்கள் நமக்கு தான் வாக்களிப்பார்கள் எனக் கூறினார். ஊராட்சி கிளை கழகத்தை வலுபடுத்தினால் தான் நமது அமைப்பு வலுவான நிலையில் இருக்கும் எனவும், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சியின் உட்கட்டமைப்பினை உறுதிபடுத்த வேண்டும் இல்லையென்றால் 50 கோடி செலவு செய்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என பேசினார்.

    முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    இதேபோல் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர், நமது கட்சி தேர்தல் நடத்தி அதனை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தால் தான் நமது கட்சி சின்னமான இரட்டை இலை சின்னம் கிடைக்கும் எனவும், கட்சி சட்ட திட்டத்தின் படி தேர்தல் நடத்திட வேண்டும், நமது கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்ததை வரும் 24 ஆம் தேதி அன்று நமது புரட்சி தலைவர் நினைவு நாளில் அவரது சமாதியில் வைத்து ஆசி பெற வேண்டும் எனவும், மேலும் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு இருந்தால் பேசி அனைவரும் ஒன்றுபட்டு சமாதான முறையில் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+