சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்திப்போட்டு தாக்குதல்.. 4 இளைஞர்கள் கைது!
விழுப்புரம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டாசை கொளுத்திப்போட்டு ரகளையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது அரங்கண்டநல்லூர்.
இந்த ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு எதிரே திருக்கோவிலூர் - விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்திய 5 பேர் கொண்ட கும்பல், தீபாவளி அன்று பட்டாசு வெடித்து இருக்கிறது.

இதனைக்கண்ட சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான் (55) அந்த கும்பலை எச்சரித்து இருக்கிறார். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பட்டாசை வெடிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான்மீது பட்டாசை கொளுத்தி வீசியுள்ளனர். உடன்டியாக சுதாரித்துக்கொண்டு விலகியதால் சப்-இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏதும் எற்படவில்லை.
இதனையடுத்து, பட்டாசை வீசிய இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல அவர் முயன்றார். அப்போது அந்த கும்பல் சப்-இன்ஸ்பெக்டர் டார்சானை தாக்கி இருக்கிறது. இதனைக்கண்ட சக காவலர்களாக பயிற்சி துணை ஆணையர் நமச்சிவாயம், உதவி ஆய்வாளர் புனிதவல்லி மற்றும் காவலர்கள் 4 இளைஞர்களை மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டார்.
விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியது அரங்கண்டநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்த ஆகாஷ் (வயது 19), விக்னேஷ் (வயது 27), சோமு (வயது 35), ஷாநவாஸ் (வயது 25) என்பது தெரியவந்துள்ளது. இவர்களின் மீது கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஹரிதரன் என்பவரை தேடி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications