குழந்தையை தாக்கியதற்கு வருந்துகிறீர்களா?.. செஞ்சி பெண்ணிடம் அரசு மனநல மருத்துவர் கேட்ட கேள்வி!
விழுப்புரம்: குழந்தையை தாக்கிய தாய்க்கு மனநலப் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை என அரசு மருத்துவர் சான்றிதழ் அளித்துள்ளார். இதையடுத்து அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்த இருக்கிறார்.
Recommended Video
விழுப்புரம் மாவட்டம் மணலப்பாடி அடுத்த மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். ஆந்திர மாநிலம் ராம்பள்ளியைச் சேர்ந்த துளசி என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்த நிலையில் ஊரடங்கால் வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்த நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு வடிவழகன் அனுப்பிவிட்டார்.

துளசியின் செல்போன்
அப்போது துளசியின் செல்போனை எடுத்து பார்த்த போது ஒன்றரை வயதுள்ள இரண்டாவது மகனை சரமாரியாக தாக்கி அதை வீடியோவாகவும் துளசி பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் குழந்தையை கொடூரமாக தாக்கிய துளசி மீது சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

குழந்தையை தாக்கிய தாய்
கண்ணு மண்ணு தெரியாமல் குழந்தையை தாக்கிய அவர் ஒரு கட்டத்தில் அந்த வீடியோவில் அடித்து அடித்தே தனது கை வலிப்பது போல் ஒரு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இவருக்கு வலி ஏற்படுகிறது என்றால் இவரிடம் தினமும் தாக்குதலுக்குள்ளான அந்த குழந்தைக்கு எத்தனை வலி இருந்திருக்கும் என்பதே அந்த வீடியோவை பார்க்கும் மக்களின் மனநிலையாக இருந்தது.

ஆண்டவன் கொடுத்த வரம்
ஆங்காங்கே குழந்தையில்லாமல் பல்வேறு சொல்லடிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகும் எத்தனையோ பெண்களுக்கு மத்தியில் ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதத்தை இப்படி கொடூரமாக இந்த பெண் தாக்குகிறாரே என வீடியோவை பார்க்கும் பெண்கள் கோபமடைந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணை போலீஸார் சித்தூர் சென்று கைது செய்தனர்.

கருத்து வேறுபாடு
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கும் கணவருக்கும் இருந்த கருத்து வேறுபாட்டால் இப்படி செய்ததாக துளசி கூறியிருந்தார். இதையடுத்து தந்தையிடம் விசாரணை நடத்தியதில் துளசிக்கு வேறு ஒருவருடன் தொடர்பிருப்பதால்தான் குழந்தையை தாக்கினார் என தெரிவித்தார். இதையடுத்து துளசியிடம் போலீஸார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தனக்கும் வேறு ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக ஒப்புக் கொண்டார்.

கள்ளக்காதலன் மீது அதிகரித்த காதல்
மேலும் கள்ளக்காதலனை விடுவதற்கு மனம் இல்லாததாலும் அதை விடுமாறு வற்புறுத்திய என் கணவர் மேல் இருந்த வெறுப்பாலும் குழந்தையை தாக்கியதாக துளசி வாக்குமூலம் அளித்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது தாய் வீட்டு தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மனநலம் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு மனநலம் பாதிப்பு இல்லை என தெரியவந்தது. துளசியிடம் மருத்துவர் பாரதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் மிகச் சரியாக அவர் பதில் அளித்திருந்தார். மேலும் குழந்தையை தாக்கியது குறித்து வருத்தப்படுகிறீர்களா என மருத்துவர் கேட்டதற்கு ஆம் என துளசி பதில் அளித்துள்ளார். மேலும் துளசியின் மனநலம் நன்றாக இருக்கிறது என மருத்துவர் பாரதி சான்றிதழ் அளித்துள்ளார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்











Click it and Unblock the Notifications