Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டோல்கேட்டில் 340 ரூபாய் பாஸ் எடுத்தால் ஒரு மாதம் பயணிக்கலாம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் உள்பட பல்வேறு சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்கள் 340 ரூபாய் கட்டி பாஸ் எடுத்து, ஒரு மாதம் பயணிக்க முடியும். சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 340 ரூபாய் குறித்தும் தெரிவித்துள்ளது.


கால மாற்றத்திற்கு ஏற்பவும், வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், இந்தியா முழுவதும் நான்கு வழிச்சாலை,ஆறு வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படி உருவாக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வசூலிக்கப்படுகிறது. பொதுவாக சுங்கச்சாவடிகள் 15 வருடங்களுக்கு மட்டுமே அமைக்கப்படும் அல்லது அதற்காக செலவழித்த தொகையை எடுக்கும் வரை சுங்ககச்சாவடி செயல்படும் தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் தமிழ்நாடு முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் கடந்த ஆண்டு நிலவரப்படி அமைக்கப்பட்டு இருந்தன. இந்த எண்ணிக்கை இப்போது 51 ஐ கடந்துள்ளது.

toll gates villupuram

சுங்கச்சாவடி விதிகளை பொறுத்தவரை 60 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் . மேலும் 15 ஆண்டுகளை கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும். இதன்படி பார்த்தால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். ஆனால் மாறாக புதிய சுங்கச்சாவடிகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட 3 புதிய சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ளன.

சேலம், விழுப்புரம், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் சுங்கச்சாவடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் ஆகும். மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது இங்கு அதிகப்படியாக சுங்கச்சாவடிகள் இருக்கினறன. அதிலும் குறிப்பாக சேலம் மாவட்ட மக்கள் திரும்பிய பக்கம் எல்லாம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்..

toll gates villupuram

அதேநேரம் ஒரு மாவட்டத்தில் சுங்கச்சாவடி அமைக்கிறார்கள். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பதிவெண் கொண்ட வாகனங்கள் உள்ளூர் வாகனங்களாக கருதப்படும். அந்த வாகனங்களுக்கு மற்ற வாகனங்களை விட கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும். உதாரணமாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விழுப்புரம் சுங்கச்சாவடியில் கார் ஜீப் வேன் போன்ற வாகனங்களுக்கு ஒருமுறை செல்ல கட்டணம் 60 ரூபாய் என்றால், உள்ளூர் பதிவு பெற்ற வாகனங்களுக்கு வெறும் 35 ரூபாய் தான் கட்டணம். வணிக வாகனங்களுக்கு 100 ரூபாய் கட்டணம் என்றால், விழுப்புரம் மாவட்டபதிவெண் வாகனங்களுக்கு 50 ரூபாய் கட்டணம் ஆகும். அதேபோல் பேருந்துகளுக்கு 330 என்றால், உள்ளூர் பேருந்துகளுக்கு 165 ரூபாய் தான் கட்டணம் ஆகும். அதாவது வழக்கமான கட்டணத்தை விட பாதி கட்டணம் தான் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படுகிறது.

அதேநேரம் டோல்பிளாசா அமைந்துள்ள மாவட்டத்தின் பதிவு எண் கொண்ட வணிக பயன்பாடு அல்லாத உள்ளூர் வாகனங்கள் வெறும் 340 ரூபாய்க்கு மாதாந்திர பாஸ் பெற்று பயணிக்க முடியும். இந்த சலுகை பெற விரும்புவர்கள் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், இந்த வாகனம் உங்களுக்கானது என்பதற்கான சான்றிதழ், டோல்பிளாசா அமைந்துள்ள மாவட்டத்தில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வாகனம் என்பதற்கான ஆர்சி புக் நகல், உள்ளிட்டவற்றுடன், எல்ஆர்பி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விழுப்புரம் மாவட்ட சுங்கச்சாவடிகளில் அளிக்க வேண்டும்.

மாதாந்திர பாஸ் கட்டணம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்ட உயர்வு குறித்து இன்று அறிவிப்பு வெளியிட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையமே இன்றைய விளம்பரத்தில் 340 ரூபாய் கட்டண பாஸ் குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+