Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வியில் புரட்சியை ஏற்படுத்தப்போகும் இல்லம் தேடி கல்வி திட்டம் - அன்பில் மகேஷை பாராட்டிய முதல்வர்

இல்லம் தேடி கல்வி என்பது சாதாரண திட்டம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: இல்லம் தேடி கல்வித்திட்டம் பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய கல்விப்புரட்சியை ஏற்படுத்தக்கூடிய திட்டம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றக்கூடிய இந்த திட்டத்தை தொடங்க காரணமாக இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பாராட்டியும் பேசினார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

Recommended Video

    இல்லம் தேடி கல்வி திட்டம்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியஇடம் இதுதான் - அன்பில் மகேஷ் பரபர பேட்டி

    மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நீக்க 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இல்லம் தேடி கல்வி திட்டத்தை விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி என்னும் திட்டத்தை அறிவித்தது.

    அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனில் எந்தவொரு குறைபாடும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 12 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதகாலம் தினமும் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் சொல்லி கொடுப்பார்கள்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், "கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும் கல்வி தருந்தொறும் மிகச்சேர்ந்திடும்" என்று பாடினார் பாவேந்தர் பாரதி தாசன். அவரது பாடலுக்கு ஏற்ப பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது என்று கூறினார். தான் இன்றைக்கு மன மகிழ்ச்சியோடு இருப்பதாக கூறினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

    திராவிடக்கல்வி

    திராவிடக்கல்வி

    இல்லம் தேடி கல்வி என்பது சாதாரண திட்டம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டம். மிகப்பெரிய கல்வி புரட்சிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. திண்ணைப் பள்ளிக்கூடங்களை திராவிட இயக்கம் கொண்டு சேர்த்தது. திராவிடம் பற்றி அறியாதவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

    கொரோனா காலம்

    கொரோனா காலம்

    மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தை காமராஜர்,எம்ஜிஆர், கருணாநிதி அவர்களால் செழுமைப்படுத்தப்பட்டது. அது போல சிறப்பான திட்டம்தான் இல்லம் தோறும் கல்வி திட்டம். கொரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் மாணவர்கள் முடங்கி விட்டனர். மனதளவில் பாதிக்கப்பட்டனர்.
    படிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. இந்த பாதிப்பை சரி செய்யவே இல்லம் தேடி கல்வி திட்டம் உருவாக்கப்பட்டது.

    கொரோவால் உதயமான கல்வித்திட்டம்

    கொரோவால் உதயமான கல்வித்திட்டம்

    வீட்டிற்கு அருகிலேயே இடம் தேர்வு செய்யப்பட்டு கல்வி கற்பிக்கப்படும். உங்களின் வசதிக்கேற்ப ஆசிரியர்கள் வீடு தேடி வந்து படிக்க வைப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பள்ளியுடன் எங்கள் கடமை முடிந்து விட்டது என்று கருதாமல் வீட்டிற்கு வந்து கற்று தருவார்கள். ஏதாவது நெருக்கடி காலத்தில்தான் புதிய திட்டங்கள் உதயமாகும். கொரோனா என்ற நெருக்கடி காலத்தில் உதயமானதுதான் இந்த இல்லம் தேடி கல்வி திட்டம். கொரோனா தொற்று குறைந்து விட்டதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் கூறினார்.

    மாணவர்களுக்கு ஆடலுடன் கல்வி

    மாணவர்களுக்கு ஆடலுடன் கல்வி

    பள்ளிக்கு வந்து படிக்க கூடிய சூழல் இல்லாவிட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் தற்போது இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார் முதல்வர் ஸ்டாலின். இடைநிற்றல் விளிம்பில் நிற்கும் 1.41 லட்சம் குழந்தைகளை, ஒருவர்கூட விடாமல் பள்ளியில் சேர்த்தல். கற்றல் இடைவெளியைக் குறைக்கப் பாடல்கள், புதிர் விளையாட்டுகள், விடுகதைகள், விளையாட்டு வழிக் கணிதம், எளிய அறிவியல் பரிசோதனைகள் என ஆறு மாதங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

    34 லட்சம் மாணவர்கள்

    34 லட்சம் மாணவர்கள்

    34 லட்சம் அரசுப் பள்ளிக் குழந்தைகள், 20 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில், 1.70 லட்சம் தன்னார்வலர்களையும் கூடவே தொண்டு நிறுவனங்களையும் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அரசுப் பள்ளிக் குழந்தைகளை மையப்படுத்தி இத்திட்டம் உருவாக்கப்பட்டாலும், மையங்கள் நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்குபெற்றுப் பயன் பெறலாம் என்பது இதன் சிறப்பு. இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.

    சான்றிதழ்

    சான்றிதழ்

    வகுப்புகள் தினமும் மாலை 5 மணி இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் நடத்தப்பட வேண்டும்.தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. மாநில அளவிலான இந்த திட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் வரை நடைபெறும் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+