அமைச்சரென்று கூட ஒரு மரியாதை இல்லையே! திண்டிவனம் திமுக நிர்வாகிகளால் திகைத்துப் போன செஞ்சி மஸ்தான்!
விழுப்புரம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையிலேயே திண்டிவனம் திமுக நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனது முன்னிலையிலேயே இப்படி சண்டை போட்டால் அமைச்சர் என்று நான் எதற்கு எனக் கேட்காத குறையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை கண்டு திகைத்துப் போய் நின்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார். அப்போது திண்டிவனம் முன்னாள் திமுக நகரச் செயலாளர் கபிலன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தற்போதைய நகரச் செயலாளர் தங்களை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுப்பதில்லை என்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பெயர் போடுவதில்லை எனவும் வாக்குவாதம் செய்தனர்.

அதற்கு உரிய விளக்கத்தை திண்டிவனம் திமுக நகரச் செயலாளர் கொடுத்தும் அதை ஏற்காத கபிலன் தரப்பு, அமைச்சர் முன்னிலையிலேயே பெருங்குரலெடுத்து கத்தி ஆர்ப்பாட்டம் போட்டது. உட்கார்ந்து பேசுங்க, உட்கார்ந்து பேசுங்க என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை அமைதிப்படுத்தியும் அங்கே வாக்குவாதம் தொடர்ந்தது.
இது போன்ற நிகழ்வுகள் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையிலோ, எ.வ.வேலு முன்னிலையிலோ நடந்திருந்தால் பிரச்சனை செய்த நபரை அன்றைய தினமே கட்சியிலிருந்து கட்டம் கட்ட நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் அமைச்சர் செஞ்சி மஸ்தான் அது போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து வாக்குவாதம் செய்தவர்களை சமாதானம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
கட்சிக் கூட்டங்களுக்கு ப்ளக்ஸ் பேனர்களோ, சுவரொட்டிகளோ வேண்டாம் கட்சிக்கொடி கட்டினால் மட்டும் போதும் என திமுக தலைமை கேட்டுக்கொண்டதற்கு காரணமே இது போன்ற பெயர் போடவில்லை என்ற பிரச்சனையும், படம் போடவில்லை என்ற சர்ச்சையும் எழும் என்பதேயாகும்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications