“உல்டா” ஆகப்போது.. மதவாத சக்திகள் கையில் “அதிமுக”! பாஜகவால் ஆபத்து - எச்சரிக்கும் மாஜி எம்பி
விழுப்புரம்: அதிமுக உட்கட்சி பிளவு காரணமாக பாஜக தலைமை ஏற்று அதிமுகவுக்கு ஒரு சில சீட்டுகள் வழங்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது என்றும், ஓபிஎஸ் இபிஎஸ் பிளவு திமுகவுக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு இருப்பதாகவும் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதா வழிநடத்தியபடி அதிமுகவை உருவாக்க வாருங்கள் என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிச்சாமி, "அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிளவினால் அதிமுக தொண்டர்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர்.

மதவாத சக்திகள்
அதிமுக உட்கட்சி பிளவின் காரணமாக மதவாத சக்திகளின் கையில் தற்பொழுது அதிமுக உள்ளது. வரும் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி தலைமைப் பொறுப்பு ஏற்று பின்னர் கூட்டணி கட்சியில் அதிமுகவுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே வழங்கும் நிலைமை ஏற்படும். தற்பொழுது இபிஎஸ் ஓபிஎஸ் ஒற்றைத் தலைமைக்காக போட்டி போட்டுக் கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

முறையான பொதுக்குழு
இதனை தடுக்கும் விதத்தில் எம்ஜிஆர் வழியில் லஞ்ச லாபம் இல்லாத உண்மையான ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் முறையாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும். தொடர்ந்து இபிஎஸ் பொதுச் செயலாளராகவும் ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றனர்.

சாதிய பார்வை
இந்த நிலையில் வழக்குகள், குற்றங்களிலிருந்து தப்பிக்கவே இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என யாராக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் தொண்டர்கள் வழியில் தொண்டர்கள் செல்வாக்கைப் பெற்று பொதுச் செயலாளராக ஆகலாம். அதிமுகவில் ஓபிஎஸும் இபிஎஸும் ஜாதிய பார்வையுடன் ஊழல் செய்யும் நபர்களுக்கு சீட்டு வழங்குகின்றனர்.

சசிகலாவுக்கு தகுதியில்லை
ஓபிஎஸ் இபிஎஸ் பிளவுபட்டதால் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுக கட்சிக்கும் சாதகமாக அமைய சூழல் உருவாகியுள்ளது. இதனை தடுக்க வேண்டும். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோர் மூலம் உருவாக்கப்பட்ட அதிமுகவின் சின்னமும், கொடியும் முடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலாளராக சசிகலாவுக்கு தகுதி இல்லை. உண்மை தொண்டர்கள் அதை ஏற்க மாட்டார்கள்." என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications