கள்ளக்குறிச்சி பெண் சார் பதிவாளரை அறையில் பூட்டி பத்திரப்பதிவு.. அதிமுக பிரமுகர் உள்பட 6 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றும் லோகநாயகி என்பவர், உரிய ஆவணங்கள் இல்லாததால் பத்திரப்பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் சார் பதிவாளரை அறையில் வைத்து பூட்டி பத்திரப்பதிவு செய்ய வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

சொத்து ஆவணங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றால், உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் உங்களிடம் இல்லை என்றால், கண்டிப்பாக சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்ய மாட்டார். அதேபோல் நிலம் தொடர்பான சந்தேகம் இருந்தாலும், நிலம் என்ன வகை நிலம் என்ற சர்ச்சை இருந்தாலும் கண்டிப்பாக பத்திரப்பதிவு செய்ய மாட்டார்.

Kallakurichi sub-registrar locked in room to register deed AIADMK leader and 5 arrested

ஆவணங்கள் இல்லை என்றால் பத்திரப்பதிவு இல்லை

ஆனால் சிலர் பணம் கொடுத்தும், மிரட்டியும் பத்திரப்பதிவு செய்ய முயற்சிக்கிறார்கள். அப்படி பத்திரப்பதிவு செய்தாலும் பின்னாளில் நீதிமன்றம் மூலம் பெரிய சிக்கல் வரும் என்பதால், பத்திரப்பதிவு தற்போது மறுக்கப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெண் சார் பதிவாளரை அறையில் வைத்து பூட்டி பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்துள்ளது.

திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக (பொறுப்பு) லோகநாயகி என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று உளுந்தூர்பேட்டை அருகே நகர் கிராமத்தை சேர்ந்தவரும், அ.தி.மு.க.வின் திருநாவலூர் ஒன்றிய பேரவை செயலாளருமான 46 வயதாகும் தவிடன் , உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பத்திர எழுத்தர் அன்பழகன் (53), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பா.ம.க. மாநில நிர்வாகி வக்கீல் சுரேஷ்குமார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பத்திரப்பதிவுக்கு ஆவணங்கள் இல்லை

பின்னர் அவர்கள், அங்கிருந்த பொறுப்பு சார் பதிவாளர் லோகநாயகியிடம், சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை பாதூர் கிராமத்தை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்கள். இதையடுத்து பத்திரப்பதிவுக்கான ஆவணங்களை லோகநாயகி வாங்கி சரி பார்த்தார். பின்னர் அவர், பத்திரப்பதிவு செய்வதற்கு முறையான ஆவணங்கள் இதில் இல்லை என கூறப்படுகிறது. எனவே பத்திரப்பதிவு செய்து தரமுடியாது என தெரிவித்தாராம்.

லோகநாயகி மறுப்பு

மேலும் சார் பதிவாளர் விடுமுறையில் சென்றுள்ளார். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பி வரும்போது அவரிடம் பத்திரப்பதிவு செய்து கொள்ளுங்கள் என்று லோகநாயகி கூறினாராம். ஆனால் அதிமுக பிரமுகர் தவிடன் உள்ளிட்டவர்கள் தற்போதே பத்திரப்பதிவு செய்து தர வேண்டும் என கூறி லோகநாயகியை மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அச்சமடைந்த லோகநாயகி அலுவலகத்தில் இருந்து வெளியேற முயன்றார். அப்போது தவிடன் உள்ளிட்டவர்கள் உடனே, லோகநாயகி வெளியே செல்ல முடியாதபடி அந்த அறையின் கதவை பூட்டியதாகவும் புகார் எழுந்தது.

மிரட்டி பத்திரப்பதிவு

மேலும் பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல், இங்கிருந்து செல்ல முடியாது என கூறி லோகநாயகியை அவர்கள் தாக்கவும் முயற்சித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்போது அவர்களை அங்கிருந்த ஊழியர் பழனி என்பவர் சமாதானம் செய்ய முயன்றாராம். இதில் ஆத்திரமடைந்த தவிடன் உள்ளிட்டவர்கள் பழனியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாயகி வேறு வழியின்றி பத்திரப்பதிவு செய்து கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாராம்.

அதிமுக பிரமுகர் கைது

தன்னை மிரட்டி பத்திரப்பதிவு செய்தது குறித்து அவர் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தவிடன், அன்பழகன், சேந்தமங்கலத்தை சேர்ந்த பிரான்சிஸ் (66), அம்புரோஸ் (58), யேசுதாஸ் (35), அந்தோணி ராஜ் (35), ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 16 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+