"சித்தியுடன்".. சொல்லி பார்த்தும் கேட்காத ரவுடி.. கடைசியில் சித்தப்பா செய்த அதிரடி வேலை!

கள்ளக்காதல் காரணமாக இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சித்தியுடன் உறவு இருந்துள்ளது ஒரு ரவுடிக்கு.. சொல்லி சொல்லி பார்த்தும் ரவுடி கேட்கவே இல்லை.. கடைசியில் சித்தப்பாவே ரவுடியை கொன்றுவிட்டார்.. ஆத்திரம் அடங்காமல் ரவுடியின் பிறப்புறுப்பையும் அறுத்து வீசியெறிந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் விஜி.. இவர்தான் அந்த ரவுடி.. 36 வயதாகிறது.. இவர் மீது இல்லாத கேஸே கிடையாது.

கொலை, கொலை முயற்சி, கொள்ளை.. இப்படி ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.. இவரது சித்தப்பா உறவானவர் சிலம்பரசன்.. மனைவியுடன் சண்முக பெருமாள் தெருவில் வசித்து வருகிறார்.

Man killed youth due to family issue near Villupuram

இந்நிலையில், விஜிக்கும், அந்த சித்திக்கும் இடையே கள்ளக்காதல் வந்துவிட்டது.. சிலம்பரசன் வீட்டில் இல்லாத நேரங்களில் எல்லாம் விஜி, சித்தியுடன்தான் இருப்பாராம்... அடிக்கடி வீட்டுக்கும் வந்து போயுள்ளார்.. இதை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் கவனித்துவிடவும், அந்த செய்தி சிலம்பரசனுக்கு எட்டியது.

ஆனால், இதை ஆரம்பத்தில் சிலம்பரசன் நம்பவே இல்லையாம்.. இதற்கு பிறகு பலரும் வந்து இதே கதையை சொல்லவும்தான், தன் வீட்டை தானே நேரடியாக நோட்டம் விட்டுள்ளார். அப்படித்தான், விஜி சிக்கினார்.

பின்னர் குடிபோதையில், விஜியின் வீட்டுக்கு சென்று, தகராறில் ஈடுபட்டதுடன், தான் வைத்திருந்த கத்தியால் விஜியை பல இடங்களில் சரமாரி குத்திவிட்டார்.. அத்துடன், விஜியின் பிறப்புறுப்பையும் அறுத்து துண்டித்தார்.. இதில் அப்போதே விஜி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழவும், அதற்குள் பொதுமக்கள் கூடி, விழுப்புரம் போலீசாருக்கு தகவல் சொல்லி உள்ளனர்.

விரைந்து வந்த போலீசார் விஜியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே விஜியின் உயிர் பிரிந்துவிட்டது.. இதையடுத்து, அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது... இறுதியில் போலீசார் சிலம்பரசனை கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+