கண்டிப்பா ‘நெஞ்சுக்கு நீதி’ பார்க்கனும்! அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்! ஓ அமைச்சரே சொல்லிட்டாரா?
விழுப்புரம் : திமுக இளைஞரணி தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை அனைவரும் பாருங்கள் என அமைச்சர் பொன்முடி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் கானை தெற்கு, வடக்கு சார்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு கெடார் பகுதியில் நடைபெற்றது.
இதில் கானை தெற்கு ஒன்றிய செயலாளர் கல்பட்டு ராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அமைச்சர் பொன்முடி
நிகழ்ச்சியில் பேசிய அவர்," உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் ஏனென்று சொன்னால் உண்மையிலேயே அம்பேத்கர் தந்தை பெரியார் கொள்கைகளை பற்றியும், வரலாற்று இறுதியாக கடந்த காலம் எப்படி இருந்தது என்று இந்த நெஞ்சுக்கு நீதி படம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திராவிட உணர்வோடு அம்பேத்கர் உணர்வோடு நெஞ்சுக்கு நீதி படம் இருப்பதாலேயே நானும் குடும்பத்துடன் சென்று பார்த்து வந்தேன்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி நடித்தார் என்பதற்காக நான் பார்க்கவில்லை. கடந்த கால வாழ்க்கை வரலாறு பற்றி, நடைமுறை பற்றி இந்த படத்தில் அனைவரும் அப்பொழுது எப்படி இருந்தார்கள், ஜாதி ரீதியாக அப்பொழுது அனைவரையும் ஒதுக்கி வைக்கப்பட்டனர், அதன் வரலாற்றை அருமையாக நெஞ்சுக்கு நீதி படம் மூலம் காட்டியுள்ளனர். திமுக கழக ஆட்சியில் அனைவரும் சமம் என்ற முறையில் தற்பொழுது அனைவரும் ஒற்றுமையாக அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்து வருகின்றனர்

ஓராண்டு திமுக ஆட்சி
கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என சிலர் சொல்லித் திரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். திமுக மேல் கொண்டிருப்பது அதிருப்தி இல்லை திருப்தி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலில் 99% திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டு ஆட்சியில் அதிமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மாவட்டத்திற்கு என்ன செய்தார்.

ஒரே முதல்வர் ஸ்டாலின்
மேலும் கடந்த ஓராண்டு சாதனையில் தேர்தல் வாக்குறுதி கொடுத்த எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி கொடுத்த ஒரே முதல்வர் நமது தளபதி மு க ஸ்டாலின். தேர்தல் வாக்குறுதி கொடுத்த திட்டங்களை இன்னும் நான்கு வருடத்தில் முடிப்பது அல்ல, ஒரே வருடத்தில் கூட முடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மக்கள் மீது நம்பிக்கை கொண்ட நான் சொல்கின்றேன். நான்கு ஆண்டுகளுடன் முடிய போவதல்ல இந்த ஆட்சி. தளபதி இருக்கிறவரைக்கும் தமிழகத்தில் ஒரே முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மட்டுமே" என பேசினார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications