‘பவரை’ இறக்கும் திமுக.. கட்டுக் கட்டாய் சிக்கிய ஒரு கோடி! கொடுத்ததே எவ வேலுதான்.. பாமக பாலு பகீர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் அது திமுக அமைச்சர் எ.வா வேலு தேர்தல் செலவுக்காக கொடுத்து அனுப்பிய பணம் என பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் பாமக வழக்கறிஞரான பாலு.

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மரணமடைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

vikravandi assembly by election 2024 pmk baalu 2024

ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது.

இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. இதன் காரணமாக அங்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

vikravandi assembly by election 2024 pmk baalu 2024

இதனையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் தலைவர்கள் அங்கு களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தவிர்க்கும் வகையில் விக்கிரவாண்டி மட்டுமல்லாது விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் மலவந்தாங்கல் சோதனை சாவடி அமைக்கப்பட்டு காவல்துறையினரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் யாரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதன் டிக்கியில் இரண்டு சூட்கேசுகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் அதன் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடியாகும்.

இது தொடர்பாக காரில் வந்தவரிடம் விசாரித்த போது தான் ஒரு மருத்துவர் எனக் கூறியதோடு தனது தந்தையின் சொத்தை விற்ற பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். மேலும் பணத்துக்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் அமைச்சர் எவ.வேலு திமுகவினரின் தேர்தல் செலவுக்காக கொடுக்கப்பட்ட பணம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் பாமக வழக்கறிஞரான பாலு இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர்," விக்கிரவாண்டி தொகுதியில் மழவந்தாங்கள் என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை செய்ததில் டாக்டர் மதனகோபால் என்பவரிடம் ஒரு கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அமைச்சர் ஏவா வேலு அனுப்பி வைத்ததாக தெரியவந்துள்ளத. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+