திருக்கோவிலூரில் களமிறங்கும் வாரிசு.. விழுப்புரத்திற்கு மாறும் பொன்முடி! திமுக தலைமை முடிவு என்ன?
சென்னை: திருக்கோவிலூர் தொகுதியை தனது மகன் கெளதம் சிகாமணிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, மீண்டும் விழுப்புரம் தொகுதியில் களமிறங்க பொன்முடி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் இருந்து மாறவிருக்கும் சூழலில், மீண்டும் பொன்முடி விழுப்புரம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.
1989, 1996, 2001, 2006 என்று விழுப்புரம் தொகுதியில் வெற்றிபெற்று திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக மாறியவர் அமைச்சர் பொன்முடி. இந்த வெற்றியே திமுகவில் அவரை செல்வாக்கு மிக்கவராக மாற்றியது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் காரணமாக அமைந்தது. ஆனால் 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தரப்பில் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் களமிறங்கினார்.

இந்த தேர்தலில் சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்முடி தோல்வி அடைய, சிவி சண்முகம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதனால் 2016 சட்டசபைத் தேர்தலில் சிவி சண்முகத்தை எதிர்த்து போட்டியிடாமல், திருக்கோவிலூர் தொகுதிக்கு ஓடினார் பொன்முடி. இதனால் சிவி சண்முகத்தை வீழ்த்த ஸ்டாலின் சரியான வேட்பாளரை தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிமுகவில் இருந்து திமுக பக்கம் வந்த லட்சுமணனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஸ்டாலின் எதிர்பார்த்ததை போலவே விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகத்தை வீழ்த்தி திமுக தலைமையை உற்சாகப்படுத்தினார். அதிமுகவில் இருந்தவர் என்பதால், சிவி சண்முகத்தின் ஆதரவாளர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார் லட்சுமணன்.
இந்த நிலையில் சிவி சண்முகம் மயிலம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். இப்படியான சூழலில், அமைச்சார் பொன்முடி புதிய ரூட்டை எடுத்துள்ளார். கடந்த 2 தேர்தல்களாக திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட பொன்முடி, இம்முறை மீண்டும் விழுப்புரம் தொகுதியிலேயே போட்டியிட விரும்பி இருக்கிறார்.
அதேபோல் திருக்கோவிலூர் தொகுதியில் தனது மகன் கெளதம் சிகாமணியை நிற்க வைக்கவும் பொன்முடி காய் நகர்த்தி வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதற்கு திமுகவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. ஏற்கனவே நீதிமன்ற வழக்கு, இலவசங்கள் தொடர்பான பேச்சு, பட்டை நாமம் என்று பல்வேறு சர்ச்சைகளில் பொன்முடி சிக்கினார். இதனால் கட்சிப் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.
இருப்பினும் சில மாதங்களுக்கு முன் மீண்டும் கட்சிப் பதவி பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் கெளதம் சிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் கெளதம் சிகாமணி போட்டியிடாத சூழலில், அவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. அப்போது வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதனால் சட்டசபைத் தேர்தலில் மகனை கட்டாயம் களமிறக்கிட வேண்டும் என்பதில் பொன்முடி தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. ஆனால் திமுகவினர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், திமுக தலைமையின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்?











Click it and Unblock the Notifications