"ஜெகஜால" சந்துருஜி.. கட்டில், மெத்தை, ஏசி ரூம்கள், ஸ்பா.. பகீர் கிளப்பும் கோட்டக்குப்பம் ரகசியங்கள்

பாண்டிச்சேரி தொழிலதிபர் சந்துருஜியிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கட்டில், மெத்தை, ஏசி ரூம்கள், ஸ்பா என்று ஜெகஜோதியாக இருக்கிறதாம் அந்த 3 மாடி கெஸ்ட் ஹவுஸ்.. இங்கு நடிகைகளை அழைத்து வந்து விபச்சாரத்தில் தள்ளிய தொழிலதிபர் சந்துருஜி பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ளது கோட்டகுப்பம்.. இது புதுச்சேரிக்கு பக்கத்திலேயே உள்ளது.. அதனால் அங்கு வரும் பயணிகளில் பெரும்பாலானோர் இந்த பகுதிக்கும் வந்து செல்வது வழக்கம். இந்த டூரிஸ்ட்டுகளுக்காகவே நிறைய கெஸ்ட் ஹவுஸ்கள், மசாஜ் சென்டர்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன.

இந்த கெஸ்ட் ஹவுஸ்களுக்கு பக்கத்திலேயே சரக்கு கிடைத்துவிடும்.. பாலியல் தொழில் செய்வதற்காக பெண்களும் சப்ளை செய்யப்படுவார்களாம்.. பீச் ஓரம் உள்ள ரம்மியமான பகுதி என்பதாலும், ரூம் வாடகை குறைவு என்பதாலும் இந்த கோட்டக்குப்பம் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதில் நிறைய ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

 நடிகைகள்

நடிகைகள்

இந்நிலையில்தான், கோட்டக்குப்பம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட அந்த கெஸ்ட் ஹவுஸ் குறித்து ரகசிய புகார் வந்தது.. அங்கு பாலியல் தொழில் நடப்பதாகவும் கூறப்பட்டது.. இதையடுத்து விரைந்து சென்று பார்த்தபோது, 2 துணை நடிகைகள் அங்கு இருந்தது தெரியவந்தது.. இவர்கள் நடிக்கிற ஆசையில் சான்ஸ் கேட்டு முயன்று வந்துள்ளனர்.. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர்கள்.

 சாப்பாடு

சாப்பாடு

ஸ்பா சென்டரில் வேலை தருகிறோம் என்று அழைத்து வந்து இங்கு அடைத்து வைத்துள்ளனர் என்பதும், கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியதும் விசாரணையில் தெரியவந்தது. பாவம், இவர்களுக்கு 3 வேளை சாப்பாடு கூட தரவில்லையாம்.

 சந்துருஜி

சந்துருஜி

இந்த கெஸ்ட் ஹவுஸ் ஓனர் பெயர் சந்துருஜி.. இவர் ஒரு பிசினஸ்மேன்.. நாடே லாக்டவுனில் கிடந்தால், சந்துருஜி மட்டும் இந்த கெஸ்ட் ஹவுஸில் ரகசியமாக தொழில் நடத்தி வந்துள்ளார்.. இதை பற்றி தகவல் போலீசுக்கு வந்தும், உடனே கையும் களவுமாக பிடிக்கவில்லை.. ஒருவாரம் நன்றாக அந்த கெஸ்ட் ஹவுஸை நோட்டமிட்டுதான் வந்துள்ளனர்.. ரகசியமாக வந்த தகவல் உறுதி என்று தெரிந்தபிறகுதான் கைது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

 ஏசி, கட்டில்

ஏசி, கட்டில்

ஏசி ரூம்கள், ஸ்பா, கட்டில், மெத்தை என்று ஜெகஜோதியாக இருக்கிறதாம் அந்த கெஸ்ட் ஹவுஸ்.. ஆனால் யாருக்கும் இது தெரியக்கூடாது என்று கட்டிடத்துக்கு வெளியே பூசு வேலை நடப்பது போன்று கொத்தனார்கள், பெயின்டர்களை வரவழைத்துள்ளார் சந்துருஜி என்கிறது தகவல்கள்.. கணவனை இழந்த இளம் பெண்கள், வறுமையில் இருக்கும் பெண்களை டார்கெட் செய்துள்ளது இந்த கும்பல்.

 3 பேர் கைது

3 பேர் கைது

வெளி மாநில பெண்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.. இப்போதைக்கு சந்துருஜி உட்பட அவரது நண்பர் விஜயகுமார், மற்றும் அந்த கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் அனில் ஜோசப் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், மொத்தமாக கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. அந்த கெஸ்ட் ஹவுஸ் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னும் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்ற விசாரணையில் நம் போலீசார் இறங்கி உள்ளனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+