அதிமுக கூட்டணியில் நாதக? எடப்பாடியுடன் கைகோர்க்கும் சீமான்? அவரே என்ன சொல்லியிருக்காருனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அதிமுக கூட்டணிக்கு வர வேண்டுமென எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன. கூட்டணி குறித்து பொறுத்திருங்கள் எனவும், கூட்டணி குறித்து மாநாட்டில் அறிவிக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான்," எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள். பாஜக சொல்லுகிறது திமுக வரக் கூடாது என்று..

திமுக ஓரணியில் தமிழ்நாடு என்கிறார்கள். நாங்கள் ஒரே அணி மட்டும் தான் என்கிறோம். ஒரே அணி தீமைக்கு மாற்று தீமை இல்லை. நெருப்பை நெருப்பை வைத்து அணைப்பது கடினம். நீரை வைத்து அணைக்க வேண்டும். மாறி மாறி ஆண்ட ஆட்சியாளர்கள் இந்திய கட்சிகளின் தேவையை ஏன் ஏற்படுத்துகிறார்கள்.

seeman edappadi palaniswami aiadmk

அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்களின் தேவையை நிறைவேற்றி இருந்தால் அவர்கள் வர வேண்டிய தேவை இல்லை. காவல் துறை இருக்கும் போது ஏன் சிபிஐ விசாரணை. ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்று கூறுவது கர்நாடகாவில் பாஜகவும், காங்கிரஸ் தான். முல்லைபெரியாறு, தமிழின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி நிற்பார்களா அல்லது திராவிட கட்சிகள் தான் நிற்பார்களா?

இந்திய ஒற்றுமைக்காக போராடும் காங்கிரசும், பாஜகவும் கர்நாடகா நீர் தராத போது இந்திய இறையாண்மை ஒருமைப்பாடு இங்கு காக்கப்படுகிறதா? தண்ணீர் என்று கேட்கும் போது ஒருசொட்டு தண்ணீர் கொடுக்காத அதிகாரம் யார் கொடுத்தா? என்னுடைய மொழி சிதைஞ்சி போச்சு , முருகன், சிவன் பெருமான் கோவிலில் தமிழில் வழிபாடு இல்லை. தமிழில் பாசுரத்தை பாடிய ஆண்டாள் கோவிலில் தமிழில் பாடுவதில்லை.

தமிழ்நாடு தேர்வானையத்தில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதிவிட்டு வெளியில் நிற்கிறார்கள். பீகார், கர்நாடகாவில் தமிழில் தேர்வு எழுத முடியுமா? புதுமைப்பெண், தமிழ்மகன் என்ற திட்டத்தில் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் போது வேலை வாய்ப்பு பெருக்க என்ன திட்டம் உள்ளது. 24 ஆயிரம் கோடி இத்திட்டத்தில் செலவிடப்படுகிறதா? ஆட்சியாளர்கள் கடன் வாங்கி செலவிடப்படுவதால் வளர்ச்சி இருக்கிறதா?

அதிமுக நேரடியாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளார்கள். திமுக மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கூட்டணி வைக்காத பாஜக, கருணாநிதி நாணயம் வெளியிட வருகிறது. ஜெயலலிதா கூட்டணி வைத்த போது வரவில்லை. மூன்று முறை நிதி ஆயோக் கூட்டதிற்கு செல்லாத ஸ்டாலின் அமலாக்கதுறை சோதனை வருகிறது என்றவுடன் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்வதாக தெரிவித்தார். தான் இருக்கிற வரை பாஜக தமிழகத்தில் வராது என்று கூறுகிறேன். அதுபோல் திமுக கூற வேண்டும்.

ஆனால் அப்படி கூறுவதில்லை. தமிழகத்தில் அரசு தன் அதிகாரத்தை தன் அரசின் பணத்தை திமுக தலைவரின் சிலை வைக்க செலவழிக்கிறது. ஆட்சி சரியில்லை என்றால் அந்த ஆட்சியை அரியனையில் அமர்த்திய மக்கள் தான் குற்றவாளி. தமிழத்தில் பெரிய கூட்டணி குறித்த தன்னோட முடிவை மாநாட்டில் அறிவிப்பேன். தனித்து போட்டியிடவில்லை 8 கோடி மக்களுக்காக அவர்களுக்கு மத்தியில் போட்டியிடுவேன்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+