விழுப்புரம் அரசு பள்ளி வாத்தியார்.. லாட்ஜில் ஒரே அசிங்கம்.. இவர் மனைவியும் ஸ்கூல் டீச்சராம்.. கேவலம்
விழுப்புரம்: விழுப்புரத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் தற்போது கைதாகி உள்ளார்.. இவர் செய்து வைத்திருக்கும் காரியத்துக்கு எப்பவோ கைதாகி இருக்க வேண்டியவர்.. இன்றுதான் போலீசார் இவரை சுற்றி வளைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூரையொட்டிள்ளது திருவக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி.. இங்கு 350 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.. இந்த பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று ஸ்கூலுக்கு போகவில்லை.. மேலும், திடீரென தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்.

பதறிய தாய்: இதை பார்த்து பதறிப்போன மாணவியின் அம்மா, ஓடிச்சென்று மகளை காப்பாற்றியதுடன், தற்கொலையிலிருந்தும் மீட்டார்.. பிறகு, என்ன நடந்தது? என்று மகளிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை அம்மாவிடம் சொல்லி அழுதுள்ளார் மாணவி.
இதே பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன்.. 38 வயதாகிறது.. 2 வருடங்களாகவே இங்குதான் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் பகுதியில் அரசு பள்ளி சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றிருக்கிறது.. இதில் திருவக்கரை பள்ளியிலிருந்து 9-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை, மகேஸ்வரன் விழுப்புரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அரசு விழா என்பதால், 2 மாணவிகளின் பெற்றோரும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
2 மாணவிகள்: 2 மாணவிகளை அழைத்து சென்ற மகேஸ்வரன், அங்குள்ள தனியார் லாட்ஜில் ரூம் போட்டுள்ளார்.. பாலியல் தொல்லையும் தந்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அதற்கு மகேஸ்வரன், "எத்தனையோ மாணவிகள் இதுக்கு சம்மதித்த நிலையில், நீ மட்டும் சம்மதிக்க மறுப்பது ஏன்? என்று கேட்டு, வலுகட்டாயமாக, 9ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்தாராம்.. இதையெல்லாம், பாதிக்கப்பட்ட மாணவி அழுதுகொண்டே தன்னுடைய அம்மாவிடம் சொல்லி உள்ளார்.
பெற்றோர்கள்: இதைக்கேட்ட அதிர்ந்த பெற்றோரும், உறவினர்களும், நேராக கிளம்பி ஸ்கூலுக்கு வந்துவிட்டார்கள்.. தலைமை ஆசிரியரிடம் புகாரும் தந்திருக்கிறார்கள்.. இவர்கள் புகார் தந்து கொண்டிருந்தபோதே, மேலும் 5 மாணவிகள் அடுத்தடுத்து, ஒரே மாதிரியான புகார்களுடன் தலைமை ஆசிரியர் அறைக்குள் நுழைந்துவிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு, ஆத்திரமடைந்த மாணவிகளின் உறவினர்கள், அங்கிருந்த மகேஸ்வரனை சரமாரியாக வெளுத்து, வானூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்... அதற்கு பிறகுதான், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.. இப்போது மகேஸ்வரன் கைதாகி உள்ளார்.
விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவராம் இந்த மகேஸ்வரன்.. இந்த பள்ளிக்கு வந்து 2 வருடத்திலேயே பல மாணவிகளை சீரழித்திருக்கிறார்.. இத்தனைக்கும் இவரது மனைவியும், ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்..
செல்போன்: மகேஸ்வரனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தால், ஏகப்பட்ட நிர்வாண படங்களும், வீடியோக்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.. இந்த ஆபாச வீடியோக்களை மாணவிகளுக்கு காட்டி, அதைவைத்து பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்.. பாதிக்கப்பட்ட மாணவிகள் மொத்தமாக திரண்டு வந்து புகாரை தந்ததால்தான், மகேஸ்வரனை ஒரேநாளில் கைது செய்ய முடிந்துள்ளது.
இதனிடையே, மகேஸ்வரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்... ஆனால், அவரை நிரந்தரமாக நீக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை எழுப்பி வந்த நிலையில், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடவடிக்கை: பொதுவாகவே, ஆசிரியர் பணி என்பது, சேவை மனப்பான்மையுடன் செய்யக்கூடியது.. அப்படியிருக்கும்போது, குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் தகுதி என்பதே இதுபோன்றவர்களுக்கு தரக்கூடாது.. பட்டப்படிப்பு பறிக்கப்பட வேண்டும். வேறு எங்குமே இவர்களை வேலை பார்க்க அனுமதிக்கவே கூடாது.
"பணியிடை நீக்கம்" என்பது எந்தவகையிலும் எதற்குமே தீர்வை தந்துவிடாது.. "சஸ்பெண்ட், டிரான்ஸ்பர்" என்பது போன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளையும் மீறி, கடுமையான தண்டனைகள் இந்த காமுகர்களுக்கு தரவேண்டி உள்ளது..
அப்படின்னா, லஞ்சம் வாங்கினாலும் பணியிடை நீக்கம்? பெண் குழந்தைகளை சிதைத்தாலும் பணியிடை நீக்கமா? இரண்டு குற்றமும் ஒன்றாகிவிட முடியுமா?? இதுக்கு ஒரு முடிவே இல்லையா? விடிவே கிடையாதா??
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications