ஆதரவற்ற பெண்களுக்கு போதை ஊசி! மயங்கியதும் பாலியல் பலாத்காரம்.. விழுப்புரம் ஆசிரமத்தில் பகீர் சம்பவம்
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்த ஆதரவற்ற பெண்களுக்கு போதை ஊசி போட்டு பாலியல் கொடுமை
விழுப்புரம்: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்த ஆதரவற்ற பெண்களுக்கு போதை மருந்து செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்துள்ள கெடார் அருகே குண்டலபுலியார் எனும் கிராமம் உள்ளது. இங்கு அன்பு ஜோதி ஆசிரமம் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வந்தது.
இங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வசித்து வந்த சலீம் கான் என்பவர் அவருடைய மாமனார் ஜவாஹிருல்லாவை இந்த ஆசிரமத்தில் சேர்த்தார்.

அமெரிக்கா
இவர்கள் அமெரிக்கா சென்றதால் ஜவாஹிருல்லாவை பராமரிக்க யாரும் இல்லாததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதாவது சரியாக 8 மாதங்கள் கழித்து சலீம் கான் அந்த ஆசிரமத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கு அவருடைய மாமனார் இல்லை. இதுகுறித்து அங்கிருந்த நிர்வாகிகளிடம் கேட்ட போது இந்த ஆசிரமத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக 53 பேரை பெங்களூரில் இயங்கும் காப்பகத்திற்கு அனுப்பிவிட்டதாக கூறி அந்த காப்பகத்தின் முகவரியை சலீம் கானிடம் கொடுத்தனுப்பினர்.

பெங்களூர்
இதையடுத்து பெங்களூர் சென்று பார்த்த போது அந்த முகவரியில் மாமனாரை பார்க்க சென்ற போது சலீமுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கும் மாமனார் இல்லை. இதுகுறித்து விசாரித்த போது ஜவாஹிருல்லா உள்பட 17 பேர் அந்த காப்பகத்திலிருந்து காணாமல் போய்விட்டதாக தெரியவந்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை சலீம் கான் தாக்கல் செய்தார்.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அன்பு ஜோதி ஆசிரமத்தில் போலீஸார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். கடந்த 10 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த சோதனையில் போலீஸாருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்த ஆசிரமம் 17 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவது தெரியவந்தது. இங்கிருந்த மனநலம் குன்றியவர்கள் முறையாக பராமரிக்கப்படாமல் சங்கிலியால் கட்டப்பட்ட கோர நிலையை பார்க்க முடிந்தது.

ஆசிரமத்தில்
இந்த ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற பெண்களை சங்கிலியால் கட்டி போட்டு அவர்களுக்கு போதை ஊசி செலுத்தி சுயநினைவே இல்லாத போது அவர்களை பலாத்காரம் செய்தனராம். இந்த சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகள் மட்டுமல்லாமல் பலர் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

8 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ எடுத்து பதிவு செய்த அதிகாரிகள் சமூகநல அலுவலர் ராஜாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் ஆசிரமத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜுபின் , மேலாளர் பிஜு மோகன், பணியாளர்கள் அய்யப்பன், கோபிநாத், மாரிமுத்து, சதீஷ், பூபாலன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்கு கடத்தியது, மனநலம் குன்றியோர் ஆதரவற்றோரை சித்ரவதை செய்தது, பாலியல் பலாத்காரம் செய்தது என 13 பிரிவுகளின் கீழ் கெடார் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications