தோசை மாவில் மாஸ்டர் பிளான் போட்ட செல்வி.. முனியம்மாவும் உடந்தை! விழுப்புரம் வளவனூரில் யாரந்த டிரைவர்
விழுப்புரம்: பெற்ற மகனுக்கு ஆசை ஆசையாக தோசை சுட்டுக் கொடுத்துள்ளார் முனியம்மாள்.. இது தொடர்பாக விழுப்புரம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருவதுடன், 2 நபர்களையும் கைது செய்துள்ளது பரபரப்பையும், அதிர்வலையையும் உண்டுபண்ணி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் , வளவனுார் அடுத்துள்ளது சீனிவாசபுரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் விஸ்வலிங்கம்.. 29 வயதாகிறது.. கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.. தன்னுடைய 65 வயதான தாய் முனியம்மாவுடன் வசித்து வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை.

கார் டிரைவர்: இந்நிலையில், விஸ்வலிங்கம் கடந்த 17-ந்தேதி, அவரது வீட்டிலேயே இறந்து கிடந்தார்... அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.. ஆனால், அவருடைய மார்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டைகளில் ஏராளமான ரத்தக்காயங்கள் இருந்தன. இதையடுத்து, தகவலறிந்த வளவனூர் போலீசார், விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்.
உடலிலுள்ள காயங்களை வைத்து, விஸ்வலிங்கத்தை யாரோ அடித்துக்கொன்றிருப்பதாக சந்தேகித்தனர்.. எனவே, தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர்.. அப்போதுதான். செல்வி என்ற 25 வயது பெண்ணின் பெயர் அடிபட்டது. திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூர் கிராமத்தை சேர்ந்த செல்வியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார் விஸ்வலிங்கம்..
கணவன் மனைவி: ஒருகட்டத்தில் அவரை திருமணம் செய்துகொள்ளாமலேயே, தன்னுடைய வீட்டில் தங்கவைத்த கணவன் மனைவிபோல் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால், விஸ்வலிங்கம் உயிரிழந்ததுமே, செல்வியை வீட்டில் காணவில்லை.. இதனால் போலீசாருக்கு அவர்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது..
ஒருவேளை விஸ்வலிங்கத்தை செல்வி கொன்றுவிட்டு தலைமறைவாகியிருக்கலாமோ? என்றகோணத்தில் விசாரணையும், தேடுதல் வேட்டையும் துரிதப்படுத்தப்பட்டது.. இறுதியில், திருக்கோவிலூர் பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற செல்வியை போலீசார் மடக்கிப்பிடித்து, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போதுதான் பல்வேறு திடுக் தகவல்களை செல்வி போலீசாரிடம் சொன்னார்.
கார் சவாரி: அதாவது, 5 வருடங்களுக்கு முன்பு, திருக்கோவிலூர் மேலத்தாழனூர் பகுதிக்கு கார் சவாரிக்காக விஸ்வலிங்கம் சென்றபோதுதான், செல்வியை சந்தித்துள்ளார்.. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதையடுத்து, திருமணம் செய்து கொள்ளாமலேயே தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார் விஸ்வலிங்கம்.
ஆனால், விஸ்வலிங்கத்திற்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது.. இதனால் இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து செல்வியிடமும், முனியம்மாளிடமும் தகராறு செய்து வந்துள்ளார்... அதுமட்டுமல்லாமல் குடிக்க பணம் கேட்டு செல்வியையும், முனியம்மாளையும் அசிங்கமாக திட்டியும், சரமாரியாக அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.. விஸ்வலிங்கத்தின் டார்ச்சரை தாங்கிக்கொள்ள முடியாத செல்வியும், முனியம்மாளும், விஸ்வலிங்கத்தை கொன்றுவிடுவது என்று முடிவுக்கு வந்தனர்..
குடிபோதை: இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த விஸ்வலிங்கம், தன்னுடைய அம்மா முனியம்மாள், செல்வி இருவரிடமும் தகராறு செய்து அடித்து துன்புறுத்தினார். ஏற்கனவே கொலை செய்யும் முடிவில் இருந்த இருவரும், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து தோசை மாவில் கலந்துவிட்டனர்.. பிறகு, மகனுக்கு தோசையை சுட்டுதந்தார் முனியம்மாள்.. தலைக்கேறிய போதையிலிருந்த விஸ்வலிங்கம், விஷம் கலந்த தோசையை சாப்பிட்டு, வாயில் நுரைத்தள்ளி இறந்துவிட்டார்.
விஸ்வலிங்கம் இறந்தது உறுதியானதுமே, இக்கொலையை மறைக்க செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரும் மற்றொரு திட்டம் போட்டனர்... அப்போதுதான், விஸ்வலிங்கத்திற்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும், முன்தினம் நடந்த தகராறு நினைவுக்கு வந்தது.. இதையே சாக்காக வைத்து, அந்த தகராறில்தான் விஸ்வலிங்கம் கொலை செய்யப்பட்டுவிட்டதாக அனைவரையும் நம்ப வைக்க முடிவு செய்தனர்..
தோள்பட்டை: இதற்காக இறந்துபோன விஸ்வலிங்கத்தை, முனியம்மாவும், செல்வியும் சேர்ந்து கத்தியால் கிழித்தார்கள்.. மார்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் கிழித்துள்ளனர்.. இவ்வளவும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, தற்போது, செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரின் மீதும் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். விஸ்வலிங்கத்துக்கு தோசை சுட்டுக்கொடுத்த 2 பேருமே தற்போது ஜெயிலில் உள்ளனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications