பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை! ராஜேஷ் தாஸுக்கு பிப்ரவரி 12ல் கிளைமாக்ஸ்.. விழுப்புரம் கோர்ட் அதிரடி
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மீது விழுப்புரம் நீதிமன்றம் பிப்ரவரி 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ்தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ம் தேதி அறிவிக்கப்படும் என விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடுவதை தான் தவிர்ப்பது போன்ற எதிர்மறையான எண்ணம், முதன்மை அமர்வு நீதிபதி மனதில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
தனது தரப்பு வாதங்களை முன் வைக்க அவகாசம் கேட்ட நிலையில் அமர்வு நீதிபதி, தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிடும் வரை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 6ம் தேதி தீர்ப்பு வழங்குவதை தள்ளி வைக்க அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை. விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்து ராஜேஸ்தாஸ் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா கடந்த ஜனவரி 24 ஆம் தேதி தீர்ப்பளிக்க இருந்தார். ஆனால் ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகவில்லை. இதனால் கோபம் அடைந்த விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா ஜனவரி 28ஆம் தேதி ராஜேஷ்தாஸ் நேரில் ஆஜராகி அவரது தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் அவரது தரப்பு வாதத்தை முன் வைக்க கடந்த 29ஆம் தேதி கடைசி வாய்ப்பு என்றும் ராஜேஷ்தாஸ் நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி எச்சரித்திருந்தார். இதையடுத்து மேல்முறையீட்டு மனு கடந்த 29ஆம் தேதி விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜரானார்.
அப்போது மேல்முறையீட்டு வழக்கில் ராஜேஷ் தாஸ் தரப்பு வாதாட ஜனவரி 31 ஆம் தேதி கடைசி வாய்ப்பு என்றும் அன்று வாதாடவில்லை என்றால் பிப்ரவரி 3ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி பூர்ணிமா திட்டவட்டமாக தெரிவித்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த வழக்கு விசாரணையின் போது டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகவில்லை.
அவரது தரப்பு வழக்குரைஞர் ஆதிசங்கர் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணையை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாகவும் அதற்கான உத்தரவு வரும் வரை தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பிப்ரவரி 4ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். இதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர் கலா ஆட்சேபணை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டும் வாதத்தை முன் வைக்கவில்லை.
பிப்.4 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க முடியாது. வியாழக்கிழமை பிப்.1ஆம் தேதி வாதத்தை முன் வைக்க வேண்டும். அவ்வாறு வாதத்தை முன் வைக்கவில்லை எனில் மூத்த வழக்கறிஞரை நீதிமன்றமே நியமித்து வாதிட நடவடிக்கை எடுக்கும் எனக் கூறி விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை நடந்த விசாரணையின் போது ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகி தானே வாதிட்டார்.
இந்த வழக்கு பொய் வழக்கு என்றும் தன்னை சதி வலையில் சிக்க வைத்து விட்டதாகவும் கூறி தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி ஒரு மணி நேரம் வாதிட்டார். இதையடுத்து பிப்ரவரி 7ஆம் தேதி வரை தினமும் பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட அனுமதியளித்து நீதிபதி ஆர்.பூர்ணிமா உத்தரவிட்டார்.
ராஜேஷ் தாஸின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் அரசு தரப்பு வாதங்கள் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடங்கி முடிந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் வரும் 12 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications