தள்ளுவண்டியில் பட்டினியால் பலியான சிறுவன்.. "நரபலியா?".. சிசிடிவியால் திடீர் திருப்பம்- என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கடந்த வாரம் விழுப்புரம் அருகே தள்ளுவண்டியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 5 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிர்ச்சி தரும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    விழுப்புரம்: திடீர் திருப்பம்... பட்டினியால் சிறுவன் இறக்கவில்லை... சடலமாக தூக்கிவந்த இருவர்!

    விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் கடந்த 15ஆம் தேதி துணி அயர்ன் செய்யும் தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் உடலில் எந்தவித காயமுமின்றி இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

    1 வகுப்பு பள்ளி மாணவர்களின் உடையை சிறுவன் உடுத்தி இருந்தான். இதனால் அந்த சிறுவன் 1 வகுப்பு மாணவனாக இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதி போலீசார் விசாரணை முடுக்கிவிட்டனர்.

    தனிப்படை

    தனிப்படை

    இது தொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். உடற்கூறு ஆய்வில் உணவு குழலில் இரண்டு தினங்களாக உணவு ஏதும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டினியால் அந்த சிறுவன் இறந்திருக்கலாம், அவரின் வயிற்றில் ஒரு பருக்கை கூட இல்லை என்று கூறப்பட்டது.

    குழப்பம்

    குழப்பம்

    இருந்த போதிலும் அந்த குழந்தை யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து 4 தனிபடை போலீசார் தீவிரமாக தேடிவந்தது. ஆனாலும் இதுவரை அந்த சிறுவன் யார், அங்கு வந்தது எப்படி? அவரின் பெற்றோர் யார்? என்று விவரம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

    கோவில்

    கோவில்

    இந்த நிலையில் தற்போது விழுப்புரம் விரட்டிகுப்பம் பாதையில் உள்ள காளி கோயில் பகுதியிலிருந்து இரண்டு நபர்கள் சிறுவனை தோளில் தூக்கி வரும் சிசிடிவி காட்சியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தள்ளுவண்டி இருந்த இடத்திற்கு அருகே இரண்டு பேர் அந்த சிறுவனை தூக்கி செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

    இரண்டு சிசிடிவி

    இரண்டு சிசிடிவி

    மொத்தம் இரண்டு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. முதல் காட்சியில் சிறுவனை தூக்கிக்கொண்டு இரண்டு பேர் அங்கு இருக்கும் காளி கோயில் அருகே சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுவன் உயிரோடு இருப்பது போல காட்சி அளித்துள்ளார். பின்னர் இன்னொரு காட்சியில் கோவிலின் வெளிப்பக்கம் வழியாக அந்த இரண்டு பேரும் சிறுவனை தூக்கிக்கொண்டு வந்துள்ளனர்.

    நரபலி

    நரபலி

    முதல் வீடியோவில் உயிரோடு இருந்தது போல காணப்பட்ட சிறுவன், இரண்டாவது காட்சியில் சிறுவன் இறந்தது போல காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் காளி கோயில் பகுதியில் இருந்து தூக்கி வந்ததனால் நரபலி ஏதாவது கொடுக்கப்பட்டதா? என்ற கோணத்தில் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் இதில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+