தூக்க கலக்கம்.. ஓவர் ஸ்பீட்.. விடிகாலை ஏற்பட்ட இரு விபத்துகள்.. 16 பேர் பலி.. பலர் படுகாயம்
பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள்
Recommended Video
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துக்களில் 16 பேர் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உயர்மின்கோபுரங்களை அமைக்கும் பணிக்காக சென்னையிலிருந்து கோவைக்கு ஒப்பந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மகிந்திரா மேக்ஸ் பிக்கப் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேர் அருகே வந்தபோது எதிரே சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

விபத்து
இதில் எதிர்பாராதவிதமாக பஸ்ஸும், பிக்கப் வேனும் நேருக்கு நேர் பலமாக மோதி கொண்டன. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. பஸ்ஸும் வேனும் மோதியதில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி கொண்டனர். 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் ஜார்கண்டை சேர்ந்த 7 தொழிலாளர்கள் மற்றும் பஸ் டிரைவர் என்பது தெரியவந்துள்ளது.

ஆஸ்பத்திரி
அதே போல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிறைய பேர் இன்னும் இடிபாடுகளில் சிக்கி இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். ஆனால் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அதிர்ச்சி
அதேபோல, படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இது சம்பந்தமான விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

18 பேர்
இதேபோல, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லைச் சேர்ந்த 18 பேர் வேன் ஒன்றில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தனர். செய்துங்கநல்லூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக சாலையில் ஓடியது. பிறகு அங்கிருந்த ஒரு பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு 15 அடி ஆழ பள்ளத்துக்குள் பாய்ந்தது.

தூக்கம்
இதில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில் வேன் டிரைவர் தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதிர்ச்சி
இரு விபத்துகளுமே இன்று விடிகாலையில் நடந்துள்ளது. இரு தரப்பிலுமே வண்டி ரொம்ப வேகமாக ஓட்டி வரப்பட்டுள்ளது. அதனால்தான் கட்டுப்பாட்டில் விபத்து ஏற்படுத்திய வண்டிகளை பிரேக் போட்டு நிறுத்த முடியவில்லை. ஒரே நாளில் 16 பேர் இப்படி அநியாயமாக உடல்நசுங்கி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications