பட்டியல் சமூகத்தினரை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு.. தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்
விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து 3 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தினர் உள்ளே அனுமதிக்கப்படாத சூழல் இருந்தது. இதையும் மீறி கடந்த மாதம் கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் சென்றதால் அவர்கள் தாக்கப்பட்டனர்.

இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் தங்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பட்டியல் சமூகத்தினர் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அங்கு வந்த அமைச்சர் பொன்முடி, பட்டியல் சமூகத்தினர் கோயிலுக்குள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் திரௌபதி அம்மன் கோவில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பட்டியல் இன சமூக மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி, தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென 3 பேர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications