பிரம்மாண்டம்.. தலைமை செயலக நுழைவாயில் டூ ஸ்நாக்ஸ் வரை.. தவெக மாநாட்டின் சிறப்புகள் என்னென்ன?
விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக இன்று நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த மாநாட்டுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். இதையடுத்து முதல் அரசியல் மாநாடு இன்று நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றத்துடன் விஜயின் முதல் அரசியல் மாநாடு தொடங்க உள்ளது. பிற்பகல் 3.15 முதல் 4 மணிக்குள் விஜய் மாநாட்டு அரங்கத்துக்கு வருகை தர உள்ளார்.
இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கைகளை அறிவிக்க உள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வி.சாலையில் மாநாடு நடக்கும் இடத்தில் தொண்டர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன? என்று இங்கே பார்க்கலாம்.
நடிகர் விஜயின் இன்றைய மாநாட்டுக்கு 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு அரங்கில் மொத்தம் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. மேடைக்கு முன் நுழைவாயில் வரை விஜய் உள்ளிட்ட விஐபிக்கள் மேடைக்கு வருவதற்கு ஆடியோ லான்ச்சில் வருவது போல் நடைபாதையும் தனியே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேடையில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்து சென்று ரசிகர்களை சந்திக்கும் வகையில் ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது.
* நடிகர் விஜயின் அரசியல் மாநாட்டுக்காக மொத்தம் 200க்கும் அதிகமான ஏக்கரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம், உணவு சாப்பிடும் இடம், கழிவறை வசதி, ஆம்புலன்ஸ்கள் நிறுத்தும் இடங்கள் என்று தனித்தனியே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 85 ஏக்கர் பரப்பளவுக்கு மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் இருக்கைகள் போடும்படியாக இடம் காலியாக உள்ளது.
* மாநாட்டின் நுழைவாயிலில் 100 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு தொடங்குவதற்கு முன், ரிமோட் மூலம் அந்த கொடி கம்பத்தில் அக்கட்சி தலைவர் விஜய் கொடி ஏற்றி வைத்து முதன்முறையாக அரசியல் சிறப்புரையாற்ற உள்ளார்.
* மாநாட்டு அரங்கின் நுழைவாயிலில் தமிழக தலைமைச் செயலகம், ஜார்ஜ் கோட்டை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள 2 போர் யானைகள் கால்களை தூக்கியபடி தொண்டர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* மாநாடு நடக்கும் இடத்தில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், விஜய் மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளான வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.அதேபோல் தமிழன்னை, சேர, சோழ, பாண்டியர் மன்னர்கள் மற்றும் விஜய் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.
* தொண்டர்களை சமாளிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தனித்தனியாக இருக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* தொண்டர்கள் சிரமமின்றி மாநாட்டை பார்க்க 40 எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாடு நடக்கும் இடங்களை சுற்றி இந்த எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன.
* மேடைக்கு முன் நுழைவாயில் வரை விஜய் உள்ளிட்ட விஐபிக்கள் மேடைக்கு வருவதற்கு தனியே நடைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் ‛ரேம்ப்வாக்' செய்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* மாநாட்டுக்கு முக்கிய பிரமுகர்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள் வருகை தர உள்ளனர். இதனால் 6 கேரவன் வசதி கொண்ட வாகனங்கள் நிறுத்தப்ட்டுள்ளன. மதிய வேளையில் தொண்டர்களை மகிழ்விக்க கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* மாநாட்டிற்கு வருபவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கப்பட உள்ளது. பிஸ்கட், மிக்சர், வாட்டர் பாட்டில் உள்ளடக்கிய சுமார் 5 லட்சம் ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
* பாதுகாப்பு பணிக்காக ஐ.ஜி அஸ்ராகார்க், விழுப்புரம் சரக டிஐஜி திஷாமித்தல் தலைமையில் விழுப்புரம் எஸ்பி தீபக்சிவாச் உள்ளிட்ட 10 எஸ்பிக்கள், 50 டிஎஸ்பிக்கள், 150 இன்ஸ்பெக்டர்கள் என 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications