விழுப்புரம் திவ்யா.. நீங்காத மஞ்ச தாலி வாசம்.. உல்லாசத்துக்கு அழைத்த கணவர்.. அடுத்த நொடியே கொடுமை
விழுப்புரம்: ஃபேஸ்புக்கில் ஆரம்பித்த காதல், திருமணம் வரை சென்றது.. ஆனாலும் ஒரு உயிர் அநியாயமாக பறிபோயிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீரணாமூரை சேர்ந்தவர் சுகுமார்.. 28 வயதாகிறது.. இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவர்.. இவர் திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. திவ்யாவுக்கு 20 வயதாகிறது.. வேலூர் மாவட்டம் கலந்தமேடு என்ற பகுதியை சேர்ந்தவர் திவ்யா.. இவரும் சுகுமாரை தீவிரமாக காதலித்தார்.. ஃபேஸ்புக் மூலம் இவர்கள் அறிமுகமாகி, காதலும் மலர்ந்துள்ளது.

காதல்: ஒரு வருடமாக காதலித்து வந்தநிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.. அதன்படி இருவரது வீட்டிலும் பேசி, பெரியோர்கள் முன்னிலையில், திருமணம் நிச்சயமானது... கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி திவ்யா - சுகுமார் கல்யாணம் நடந்தது..
சுகுமாருக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் சற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.. இது ஆரம்பத்திலேயே திவ்யாவுக்கு தெரிந்திருக்கிறது.. இதனால் மனசங்கடமும் அடைந்துள்ளார்.. பலமுறை சுகுமாரிடம் மதுப்பழக்கத்தை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.. ஆனாலும் சுகுமார் கேட்கவில்லை..
வேதனை: திருமணம் முடிந்த நிலையிலும் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் சுகுமார். அதுவும் காலையிலேயே குடிப்பதை பார்த்து வேதனைப்பட்ட திவ்யா, கணவருக்கு அட்வைஸ் தந்து கொண்டேயிருந்தார்.. அப்போதும் எந்த பலனுமில்லை.
நாளுக்கு நாள் தம்பதிக்குள் தகராறு வெடிக்க துவங்கியது.. இப்படித்தான் நேற்று முன்தினம் காலையிலேயே சுகுமார் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது. ஆனால், சுகுமார் மதுபோதையில் இருந்ததால், திவ்யா அதற்கு மறுத்து அவரை தன்னுடைய அருகில் நெருங்க விடாமல் தள்ளிவிட்டிருக்கிறார்.. இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் அருகில் கிடந்த இரும்புக்கம்பியால் திவ்யாவின் தலையில் ஓங்கி தாக்கியிருக்கிறார்.
போஸ்ட் மார்ட்டம்: இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து, துடிதுடித்து இறந்துவிட்டார்.. இதை பார்த்ததும் சுகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.. இதுபற்றி அறிந்ததும் செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திவ்யாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்...
பிறகு இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோதுதான், சுகுமாரின் தீவிரமான மதுப்பழக்கம் தெரியவந்தது.. இதையடுத்து, தலைமறைவாகியிருந்த சுகுமாரையும் தீவிரமாக தேடி, அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. கல்யாணம் ஆகி 20 நாளே ஆன நிலையில், புதுப்பெண்ணை கணவனே அடித்துக்கொலை செய்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை தந்துவருகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications