"செல்லம் ஏமாத்துவியா".. புதுமனைவியை திடீர்னு காணோமாமே.. இந்த மேடம் பேரு மகாலட்சுமி.. டுவிஸ்ட் பாருங்க
நகை, பணத்துடன் மாயமான புதுமணப்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்
விழுப்புரம்: உருகி உருகி காதலித்த மணிகண்டன், இப்போது நொந்து போயுள்ளார்.. போலீஸ்வரை புகார் சென்ற நிலையில், இந்த மோசடி சம்பவம் பெரும் பரபரப்பை விழுப்புரத்தில் ஏற்படுத்தி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகிலுள்ளது சிறுதலைப்பூண்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் மணிகண்டன்.. இவர் விவசாய கூலிவேலை செய்து வருகிறார்...
இருவருக்கு ஃபேஸ்புக் மூலம் மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகி உள்ளார்.. மகாலட்சுமி காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்.. இவருக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லை..

அனாதை அனாதை
தன்னை ஒரு அனாதை, அனாதை என்று மகாலட்சுமி சொல்லி வருத்தப்படும் நிலையில் மணிகண்டனின் மனம் இளகிவிட்டது.. நட்பாக அறிமுகமாகி, பின்னர் காதலாக கனிந்தது.. கடந்த 3 மாதங்களாகவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மணிகண்டனிடம் கேட்க துவங்கினார் மகாலட்சுமி.. இதனால் மணிகண்டனும், தன்னுடைய அம்மாவிடம் மகாலட்சுமி பற்றி எடுத்து சொல்லி உள்ளார்.. ஆதரவற்ற பெண் என்பதால், மணிகண்டனின் அம்மாவும் உருகிவிட்டாராம்.. அதனால், தாயும், மகனும் இதுக்காகவே காரைக்கால் சென்று, மகாலட்சுமியை சொந்த ஊரான சிறுதலைப்பூண்டி கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர்..

எகிறி தப்பினிர்
கடந்த நவம்பர் 18ம் தேதி அவலூர்பேட்டை முல்லை நகரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் வெகுசிறப்பாக நடந்தது.. புதுமண தம்பதிகள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினர்.. ஒரு மாத காலம் மணிகண்டனுடன் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமி, டிசம்பர் 11ம் தேதி டக்கென வீட்டில் இருந்து எகிறிவிட்டார்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 8 பவுன் தங்க நகை, ரூ.1,00,000 லட்சம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காரில் தப்பி சென்றுள்ளார்.. மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகாலட்சுமியை காணவில்லை... இதனால் பல இடங்களில் அவரை பதறிப்போய் தேடியுள்ளார்.

ஏமாந்த மாப்ளை
அப்போதுதான் மகாலட்சுமி ஒரு காரில் ஏறி சென்றதை, அந்த கிராம மக்கள் பார்த்ததாக மணிகண்டனிடம் சொன்னார்கள்.. இதைக்கேட்டு மேலும் அதிர்ந்து போன மணிகண்டன், மகாலட்சுமிக்கு போனில் தொடர்பு கொண்டார்.. ஆனால், மகாலட்சுமியோ போனை எடுக்கவில்லை.. சில நாட்களுக்கு பிறகு, மறுபடியும் போனை போட்டார் மணிகண்டன்.. அப்போது பேசிய மகாலட்சுமி தான் வெவ்வேறு இடங்களில் இருப்பதாக சொல்லி, ஏமாற்றியிருக்கிறார்.. தொடர்ந்து மணிகண்டன் வற்புறுத்தவும், தன்னை தேடி வந்தால் கொலை செய்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்..

தப்பிச்ச பெண்
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், வளத்தி போலீசில் புகார் தந்தார்.. ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், செஞ்சி சரக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.. அப்போது திருமணம் செய்த போட்டோ உள்ளிட்ட ஆதாரங்களையும் தந்து, மகாலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. ஒரே மாதத்தில் குடும்பம் நடத்திவிட்டு, பணம், நகைகளுடன் தப்பிய பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.. அவர் ஒரு காரில் ஏறி சென்றிருப்பதால், இந்த விஷயத்தில் வேறு யாருக்காவது தொடர்பிருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications