டிவியில் கார்ட்டூன் காண்பிப்பதாக கூறி 10 சிறுமிகளுக்கு டார்ச்சர்.. தங்கவேலுக்கு சாகும் வரை சிறை!
விருதுநகர்: விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டிவியில் கார்ட்டூன் படம் காண்பிப்பதாக கூறி 10 சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுளளார். இவரை வாழ்நாள் முழுவதும் (சாகும் வரை) சிறையில் அடையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் கடந்த 2014ல் 10 சிறுமிகளை டிவியில் கார்ட்டூன் படம் காண்பிப்பதாக தனது வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து வந்த புகாரை ஏற்று விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து தங்கவேலுவை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் தங்கவேலுக்கு இயற்கை மரணம் அடையும் வரை வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் தங்கவேலுவுக்கு ரூ.2.45 லட்சம் அபராதமும், பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் வழங்க பரிந்துரை செய்து போக்சோ கோர்ட் நீதிபதி பரிமளா தீர்ப்பளித்தார்.
சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எவ்வளவு தான் கடுமையான சட்டங்கள் போட்டாலும் பாலியல் குற்றங்கள் மீண்டும் மீண்டும் தொடர்வது தொடர்கதையாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications