கிணற்றில் கிடைத்த பொக்கிஷம்.. விருதுநகர் மல்லாங்கிணறில் 123 வருடம் பழமையான தண்ணீர் தானம்.. ஆச்சரியம்
விருதுநகர்: பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது கிணறு, குளங்களை தனி நபர்கள் தானமாக அமைத்து கொடுத்தது வழக்கமாக இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கல்வெட்டு ஒன்றையும் கண்டெடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு, மறையூர் சத்திரத்தில் விருதுநகர் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டிருந்தனர்.. அப்போது மறையூர் சத்திரத்தில் பழமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அதை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது, அந்த கல்வெட்டு சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தெரியவந்தது.
தண்ணீர் தானங்கள்
அதுமட்டுமல்ல, அந்த பகுதியானது ஆதிச்சநல்லூர் என்ற பெயரால் அன்றைய காலங்களில் அழைக்கப்பட்டு வந்ததாகவும், அப்பகுதியில் உள்ள நஞ்சை,புஞ்சை என இரு வகையான நிலங்கள் பலருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளதாகவும் அந்த கல்வெட்டின் ஆய்வு மூலம் தெரியவந்தது.
அதன்படி, சத்திரத்தை சுற்றி இருக்கக்கூடிய நிலங்கள் பலருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.. எனவேதான் கலெக்டரிடம் இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு முறையான அனுமதி பெற்று, மறையூர் சத்திரம் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
விருதுநகர் பொக்கிஷம்
இந்நிலையில், 123 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிணறு ஒன்று, இதே விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது..
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் இருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவிடம் அருகில், கல்வெட்டு இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளது..
கருங்கற்களால் சதுர வடிவில் கட்டப்பட்ட கிணற்றின் மேல் விளிம்பில் அந்த கல்வெட்டு இருப்பதை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கண்டெடுத்துள்ளனர்.
கிணற்றில் பொக்கிஷம்
அந்த கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்தபோது, 123 வருடங்களுக்கு முன்பு ஊர் மக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதன் காரணமாக, கருங்கற்களால் ஆன தண்ணீர் கிணறு அமைத்து தானமாக தரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது..
இந்த கல்வெட்டு குறித்து அவர்கள் மேலும் சொல்லும்போது, "அந்த காலத்தில் மன்னர்கள், வணிகர்கள், ஜமீன்தார்கள், கிராம ஆட்சியாளர்கள், மக்கள் என பலரும் தானம் செய்யும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்ததுடன், அதனை கல்வெட்டுகளாகவும், செப்பேடுகளாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.. இதில் மிக புண்ணியமாக கருதப்பட்டது தண்ணீர் தானம்தான்.
விளிம்பில் கல்வெட்டு
கிணற்றின் விளிம்பில் இரண்டு வரியில் உள்ள கல்வெட்டில், இந்த தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.. கருங்கற்களால் ஆன கிணற்றை அமைத்து, ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக தர்மம் என்றும் எழுதி வைத்துள்ளனர்.
அதாவது "கிணற்றின் விளிம்பில் உள்ள கல்வெட்டில், கலியுகம் 5002, பிலவ ஆண்டு மாசி மாதம், இங்கிலிஸ் வருடம் 1902-ல் மல்லாங்கிணர் க.நாகம நாயக்கர் குமாரர் கணக்கு குப்புசாமி நாயக்கர் ஊர் மக்களின் பயன்பாட்டுக்காக தர்மமாக கருங்கற்களால் ஆன இக்கிணற்றை அமைத்து கொடுத்தது" என்று 2 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல, 1904-ல் நாகமநாயக்கர் இந்த ஊர் சென்னகேசவப் பெருமாள் கோயிலில் மடப்பள்ளி ஒன்றையும் கட்டி தந்திருக்கிறார்கள்.. ஒருவேளை அப்போதைய ஆட்சியாளர்களாக இவர்கள் இருந்திருக்கலாம்.
விழுப்பனூரில் துலாக்கிணறு
கி.பி.13ம் நூற்றாண்டில், குலசேகரப்பாண்டியன் ஆட்சியில் மக்களின் பயன்பட்டுக்காக ஒரு துலாக்கிணறு விழுப்பனூரில் தோண்டப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதுமே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டபோது, இதுபோன்ற கிணறு, குளங்களை தனி நபர்களும் அமைத்து தந்துள்ளனர்.
இந்த மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தான கிணறு அமைத்துக்கொடுத்ததற்கான வாய்ப்பு இருக்கின்றன.. எனவே முழுமையாக ஆராய்ந்தால் மேலும் சில கிணறுகள் கண்டறியப்படலாம்" என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications