பொய் சொல்லலாம்! ஆனால் எடப்பாடி பழனிசாமி அளவுக்கு சொல்லக் கூடாது! முதல்வர் ஸ்டாலின் கலகல
விருதுநகர்: பொய் சொல்லலாம், ஆனால் எடப்பாடி பழனிசாமி அளவுக்கு சொல்லக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விருதுநகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் பட்டம்புத்தூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டுமனை பட்டாக்களை தமிழக முதல்வர் வழங்கினார்.

முதல்வரின் வருகையால் விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டன. நான் முதல்வன் திட்டம், உரிமைத் தொகை திட்டம் குறித்தும் அரங்குகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு அரங்கத்தையும் பார்வையிட்ட முதல்வர் குறைகளை கேட்டறிந்தார்.
மொத்தமாக ரூ 417 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 40,148 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் 16852 பேருக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கடன்கள், வேளாண் கருவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், காமராஜரை நமக்கு அளித்த மண் விருதுநகர். விருதுநகர் என்றதும் அனைவரும் எண்ணத்திலும் வருபவர் சங்கரலிங்கனார். பட்டாசு ஆலை தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை அரசே ஏற்கும்.
அருப்புக்கோட்டை அருகே புதிய சிப்காட் தொழிலகம் அமைக்கப்படும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளை 41 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும். தமிழகத்திலேயே அதிகளவு உயர்கல்வி சேர்க்கை விருதுநகர் மாவட்டத்தில்தான் நடைபெறுகிறது.
அருப்புக்கோட்டை மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசி மாநகராட்சியில் 15 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் மாநாட்டுக் கூட்ட அரங்கம் உருவாக்கப்படும். விருதுநகர் நகராட்சியில் 24 கோடி ரூபாய் செலவில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்.
இந்தியா டுடே சக்தி வாய்ந்த டாப் 10 தலைவர்கள் பட்டியலில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டிருந்தார்கள். இது தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பெருமையா புகழா என்றால் இல்லை. இந்த பெருமையையும் புகழையும் வழங்கியது தமிழ்நாட்டு மக்களான நீங்கள்தான். உங்களுடைய அன்பும் ஆதரவும்தான் இந்த ஸ்டாலினின் பலம்.
தமிழகத்தை உயர்த்த நான் என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன், போராடுவேன். இந்த உழைப்பின் பயன்தான் எல்லா புள்ளி விவரங்களிலும் வெற்றிகரமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறார் மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதன செலவுகளை மேற்கொள்ளாமல் கலைஞர் பெயரில் மக்களுக்கு பயன்படாத திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை நான் ஒதுக்கி வருவதாக உளறி வருகிறார்.
அதை படித்தவுடன் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஒருவர் பொய்ய சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது என வேடிக்கையாக சொல்வார்கள். அது போல் பொய் சொல்லலாம் ஆனால் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக் கூடாது என்றுதான் தற்போது சொல்ல வேண்டும்.
அந்த அளவிற்கு புளுகுமூட்டையை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications