நல்ல மனிதர்களை ஆட்சியாளராக தேர்வு செய்யுங்க! கட்சி பாகுபாடு வேண்டாம்! துரை வைகோ வேண்டுகோள்!
விருதுநகர்: கட்சிகளை கடந்து நல்ல மனிதர்களை ஆட்சியாளர்களாக மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக மிக கடுமையாக உழைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆளுநர் ரவி மத்திய பாஜக அரசின் தமிழக ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என துரை வைகோ சாடியுள்ளார்.

மாமனிதன் ஆவணப்படம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து துரை வைகோ உருவாக்கியுள்ள மாமனிதன் ஆவணப்படம் சிவகாசியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் திரையிடப்பட்டது. இதனை கட்சியினருடன் சேர்ந்து பார்த்த துரை வைகோ அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் பல்வேறு முடிவுகளுக்கு மத்திய அரசு தடைக்கல்லாக உள்ளது என்றும் ஆளுநர் ரவி மத்திய பாஜக அரசின் தமிழக ஏஜெண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் விமர்சித்தார்.

பிரச்சனைகள்
திருவள்ளுவரில் தொடங்கி ராஜ ராஜ சோழன் விவகாரம் வரை பாஜக தொடர்ந்து பிரச்சனை செய்து வருவதாகவும் ராஜ ராஜ சோழன் குறிப்பிட்ட சாதிக்கோ, மதத்துக்கோ சொந்தமானவர் அல்ல எனவும் கூறினார். தென் கிழக்கு ஆசியாவை ஆண்ட மிகப்பெரும் மன்னன் ராஜ ராஜ சோழன் என புகழாரம் சூட்டினார். வளர்ச்சி அரசியலை புறந்தள்ளிவிட்டு மத அரசியலை பாஜக செய்து வருவதாக துரை வைகோ வேதனைத் தெரிவித்தார்.

நல்ல மனிதர்கள்
கட்சிகளை கடந்து நல்ல மனிதர்களை ஆட்சியாளர்களாக மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என துரை வைகோ கேட்டுக்கொண்டதுடன் இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக மிக கடுமையாக உழைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதால், ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ள அரசை கவிழ்க்கலாம் என மத்திய பாஜக அரசு முயன்றால் அது அவர்களுக்கு தான் தோல்வியில் முடியும் என எச்சரிக்கையும் விடுத்தார்.

அனைத்து மாவட்டங்கள்
அனைத்து மாவட்டங்களுக்கும் பயணித்து வரும் துரை வைகோ, கட்சியினருடன் ஒன்றாக அமர்ந்து வைகோ குறித்த மாமனிதன் ஆவணப்படத்தை திரையில் பார்த்து வருகிறார். துரை வைகோ பம்பரம் போல் பரபரப்பாக சுழல்வதால் மதிமுகவினர் மத்தியில் உற்சாகத்தை காண முடிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications