பலத்த வெடிச் சத்தம்.. ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் நில அதிர்வு.. மக்கள் பீதி
விருதுநகர்: இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 20க்கும் மேற்ப்பட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர்ப் பகுதி புதிய பேருந்து நிலையம் மற்றும் தளவாய் புரம், இளம்திரைகொண்டான், கொல்லக்கொண்டான், மூகவூர், சுந்தரராஜபுரம், ஒன்றியம் அலுவலகம் அருகே கம்மாபட்டி, நக்கனேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 முறை பலத்த வெடிச் சத்தம் போல் கேட்டுள்ளது.

[என்ன செய்தார் உங்கள் எம்.பி.]
இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வீட்டை விட்டு வெளிவந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
இது குறித்து பேரிடர் மேலாண்மை இயக்குநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வானிலை ஆராய்ச்சி மையம் மூலம் நில அதிர்வு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில், மக்கள் இன்னும் பீதியிலிருந்து மீளாத நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications