உடைகிறதா திமுக கூட்டணி? அதுவிடுங்க.. ராஜேந்திர பாலாஜி ரூ.3 கோடி வாங்கினாரா? விருதுநகரில் இன்று கேஸ்
விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை, மாவட்ட ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், இன்று முதல் வழக்கு விசாரணை ஆரம்பமாக உள்ளது.. இதனால் அதிமுக வட்டாரமே பரபரப்பில் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி, ரூ.3 கோடி மோசடி செய்துவிட்டதாக 2021ல் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

பலரிடம் பணத்தை பெற்றார்
சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன் என்பவர், தனது உறவினருக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாக தந்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார், கடந்த 2021 நவம்பரில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிமுக நிர்வாகி மாரியப்பன் ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அதே நாளில் அதிமுக நிர்வாகி விஜய் நல்லதம்பி சத்துணவு, கூட்டுறவு, ஆவின், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட வேலைகளுக்கு பலரிடம் பணத்தை பெற்று, ராஜேந்திர பாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் பாபு ராஜ், பலராமன், முத்துபாண்டி ஆகிய 4 பேர் மீதும் மோசடி உட்பட 4 பிரிவுகளில் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நீதிபதி உத்தரவு
இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது 2023 ஜனவரியில் ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி ஆன்லைன் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால், இந்த வழக்கை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இன்று என்னாகுமோ
இந்த வழக்கை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மே19-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஜுன் 16ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அப்போது ஜூலை 16-ம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இன்று முதல் வழக்கின் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள துவங்கிவிட்ட நிலையில், ராஜேந்திர பாலாஜி மீதான விசாரணை துவங்க உள்ளது விருதுநகர் அதிமுகவில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
திமுக கூட்டணி
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, "திமுக கூட்டணியில் மிகப்பெரிய பூகம்பம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விசிக மட்டுமல்ல ஒட்டுமொத்த கூட்டணியும் உடைய போகிறது. நாலரை வருடங்களாக எதுவுமே செய்யாமல், வரப்போகும் இந்த 8 மாதம் நாடகம் நடத்த திட்டமிடுகிறார்கள்..
எப்படியாவது மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கலாம் என்று தான் திமுக இருக்கிறது. இதனால், திமுக ஆட்சி மேல் உள்ள கோபம் மக்களுக்கு தீர்ந்து விடுமா?. எல்லாரும் கொதித்துப் போய் உள்ளனர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications