விருதுநகர் அருகே தீப்பிடித்து எரிந்த அரசு பஸ்.. பதறி அடித்து இறங்கிய பயணிகள்! ஹைவேயில் திக் திக்
விருதுநகர்: நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் நடு வழியில் தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பதறியடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து வெளியேறினர். இதனால் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் என்.ஜினில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.
உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். தொடர்ந்து பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேறினார். சற்று நேரத்தில் பஸ் முழுக்க தீப்பிடிக்க ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களில் பஸ் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.

நல்வாய்ப்பாக பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பஸ்சில் தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஸ்சில் இருந்த சில பயணிகளின் உடைமைகள் தீயில் கருகி நாசமாகின. விபத்து குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications