ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்.. அன்னதானம் வழங்க சூப்பர் வசதி.. இனி ஈஸியா நன்கொடை அளிக்கலாம்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மற்றும் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில்களில் பக்தர்கள் அன்னதான திட்டத்துக்கு எளிமையாக நன்கொடை செலுத்தும் வகையில், இணையதளம் வாயிலாக 'கியூ ஆா் கோடு' பயன்படுத்தி நன்கொடை அளிக்கும் வசதி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில். இந்தக் கோவிலின் கோபுரமே தமிழ்நாடு அரசின் சின்னத்தில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்தக் கோயிலில்தான் பெரியாழ்வார் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று போற்றப்படும் ஆண்டாள் ஆகியோர் அவதரித்தனர்.

ஆண்டாள் சூடிய மாலையை எடுத்துச் சென்று திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை தினத்தன்று அணிவது வழக்கம். அதேபோல, ஆண்டாளின் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இருந்து அனுப்பப்படும் பட்டுப் புடவை ஆண்டாளுக்கு உடுத்துவதும் வழக்கம்.
கல்வி, வியாபராத்தில் முன்னேற்றம், திருமண வரம், குழந்தைப்பேறு, செல்வம் செழிப்பு நிலைபெற, விவசாயம் செழிக்க, ஆரோக்கியம் மேம்பட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து பக்தர்கள் மனமுருகி வேண்டினால் நிறைவேறும் என்பது வழக்கம். அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் அன்னதானத் திட்டத்தின் கீழ் தினமும் 100 பேருக்கு மதிய வேளையில் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது.
அன்னதானம் திட்டத்துக்கு ஒரு நாளைக்கு 3,500 ரூபாய் நன்கொடையும், 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் தொகையும் செலுத்த வேண்டும். இந்தத் தொகையில் இருந்து வரும் வட்டியின் மூலமாக ஆண்டுக்கு ஒரு நாள் பக்தர்கள் விரும்பும் நாளில் அன்னதானம் அளிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் அன்னதானத் திட்டத்தின் வங்கிக் கணக்கு ஐஓபி - இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ளது.
இதையடுத்து, அந்த வங்கி சார்பில் ஆண்டாள் கோயில் மற்றும் மடவார் வளாக வைத்தியநாத சுவாமி கோயில்களுக்கு கியூ ஆர் கோடு மூலம் நன்கொடை அளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் எளிமையாக அன்னதானத் திட்டத்துக்கு நன்கொடை அளிக்கலாம்.
அன்னதானத் திட்டத்துக்கு 'கியூ ஆா் கோடு' மூலம் நன்கொடை அளிக்கும் இந்தத் திட்டத்தை ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் தொடங்கி வைத்தாா்.
அதேபோல, மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் எளிமையாக நன்கொடை அளிக்கும் வகையில் கியூ ஆா் கோடு மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை சட்டப் பேரவை உறுப்பினா் மான்ராஜ் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள், ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications