நாட்டுக்கே நாசம் பாஜகவின் தாமரை.. ஓபிஎஸ்ஸை நம்ப வைத்தே கவிழ்த்துட்டாங்க: விருதுநகரில் சீறிய கருணாஸ்
விருதுநகர்: விஜய் எந்த நோக்கத்துடன் அரசியலுக்குள் வருகிறார் என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். சினிமாவில் 200 கோடி ரூபாய் இழந்த அவர், அரசியலில் 2 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கவே வருகிறார்" என்று விஜய்யை தொடர்ந்து அட்டாக் செய்துபேசிவரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், தற்போது மீண்டும் விஜய் அரசியலை காட்டமாக விமர்சித்துள்ளார்.. வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பாஜக தமிழகத்தில் காலூன்றாது" என்று பாஜக குறித்தும் கூறியிருக்கிறார்.
சமீப நாட்களாகவே நடிகர் கருணாஸ் தவெக தலைவர் விஜய் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்.. ஜனநாயகன் பட விவகாரம் குறித்து கருணாஸிடம் கடந்த வாரம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்..

கருணாஸ் -தவெக மீது சாடல்
அதற்கு கருணாஸ், "விஜய் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். எதுக்குமே வாய் திறக்க மாட்டேன், டப்பிங்கிற்கு மட்டும் தான் வாய் திறப்பேன் என்றால் எப்படி?
நான் ஒரு நடிகரா ஏற்கனவே சொன்னது தான்.. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என எல்லாத் துறைகளையும் மத்திய அரசு கையில் எடுத்து அவர்களுடைய மன்னார் அண்ட் கோ கம்பெனியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். அந்த மாதிரி சென்சார் போர்டயும் மன்னார் அண்ட் கோவாக மாத்திவிட்டார்கள்..
கேரளாவில் எவ்வளவோ படம் வருகிறது. ஹிந்தியில் எவ்வளவோ படம் வருகிறது. எல்லாம் புராணக் கதை தான்.. எல்லாம் கதை தானே தவிர உண்மை கிடையாது.. எந்த ஆதாரத்தில் இந்த கதையெல்லாம் நாங்க நம்ப வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..
எனவே எல்லாம் திட்டமிட்டு செய்வது தான்... திட்டமிட்டு ஜனநாயகன் படத்தை முடக்கி, அவர்களது செயல்திட்டத்திற்குள் விஜய்யை கொண்டு வருவதற்கு தான் பாஜக இதுமாதிரி முயற்சி செய்கிறது" என்று கூறியிருந்தார்..
விருதுநகர் - விஜய்
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைவர் பொதுக்கூட்டம் நடந்தது.. இதில் கலந்து கொண்ட முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தற்போது மீண்டும் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில் பாஜக, விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து பதிலளித்துள்ளார்..
கருணாஸ் பேசும்போது, "தமிழகத்தில் எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் விசிலடியுங்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை. ஆனால் நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது.
ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய், தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாதவர்.. இதற்காக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை. கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்பது விஜய்யின் பேராசையை காட்டுகிறது..
ஓபிஎஸ்ஸை நம்ப வைத்து
பாஜவை நம்பி தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்சை, நம்ப வைத்து கழுத்தை அறுத்துள்ளார்கள்.. 10 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பற்றியும், பாஜக பற்றியும் டிடிவி.தினகரன் என்னவெல்லாம் விமர்சனம் செய்தார் என்பதை தமிழக மக்கள் மறக்கமாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என சொல்லிவந்த டிடிவி, இன்றைக்கு, சூழ்நிலை கைதியாகி பங்காளிச்சண்டை என சொல்வது மிகவும் வேடிக்கையான விஷயம்..
பாஜகவின் தாமரை நாட்டுக்கே நாசம்
பாஜவின் அரசியல் தீர்மானமே மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தி துண்டாக்குவதுதான். அதே முயற்சியைத்தான் தமிழகத்திலும் எடுக்கிறார்கள். படர்தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம், பாஜகவின் தாமரை நாட்டுக்கு நாசம்...
வரும் காலங்களில் காளை மாடு கூட கன்று போடலாம் ஆனால் பாஜக தமிழகத்தில் காலூன்றாது" என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications