Koomapatty Thangpandi: கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு.. பஸ் பயணத்தில் சோகம்.. மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமத்தை தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரபலமாக்கிய தங்கபாண்டி (Koomaptty Thangapandi)மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தனியார் தொலைக்காட்சியின் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு பஸ்சில் ஊர் திரும்பினார். கீழே இறங்கும்போது திடீரென்று பிரேக் போட்டதால் அவரது தோள்பட்டையில் பஸ்சின் கதவு இடித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
கூமாபட்டி.. சமீபத்தில் திடீரென்று இணையதளங்களில் டிரெண்டானது. இந்த கூமாபட்டி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்புக்கு அடுத்து அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கூமாபட்டி கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தை பிரபலமாக்கியவர் தங்கபாண்டி. dark_ night_ tn84 என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் அவர் தனது கிராமம் குறித்த வீடியோவை பதிவிட்டு ‛ஏங்க கூமாபட்டிக்கு வாங்க..' என சொல்லி சொல்லி ஊரை பிரபலமாக்கினார்.
தற்போது தங்கபாண்டியன் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை முடித்து கொண்டு தங்கபாண்டி பஸ்சில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஸ் சென்றது.
அப்போது திடீரென்று பிரேக் போடப்பட்டது. தங்கபாண்டி அதனை எதிர்பார்க்கவில்லை. இதனால் அவர் பஸ்சின் முன்புறம் போய் கதவில் மோதினார். அவரது தோள்பட்டையில் கதவு பலமாக இடித்தது. இதில் தங்கபாண்டியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தங்கப்பாண்டி கூறுகையில், ‛‛நான் சென்னை கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பஸ்சில் வந்திருந்தேன். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாப் வந்தது. பாத்ரூம் போக வேண்டும் என்று கூறி பஸ்சில் இறங்க முயன்றேன். அப்போது திடீரென்று டிரைவர் பிரேக் போட்டார். இறங்க சென்றவன் பஸ்சில் கீழே விழுந்துவிட்டேன். கதவை திறக்க கூறியபோது அது ‛லாக்' ஆகிவிட்டது. கை வலியில் திறக்க கூறினேன். ஒன்றும் செய்ய முடியவில்லை. வலி, வேதனை தாங்க முடியவில்லை. கம்பியை கொண்டு அடித்து கதவை திறந்து விட்டார்கள்.
ஏங்க இவ்வளவு வேகமாக பிரேக் போட்டீர்கள் என்று டிரைவரிடம் கேட்டேன். அதற்கு அவர் பார்க்கிறது வடக்கன் மாதிரி இருக்கிறேன் என்று தவறாக பசினார். நான் வலி, வேதனையில் துடித்து கொண்டிருக்க பஸ்சின் முன்பு வந்துவிட்டார்கள். நான் பிரேக் போட்டேன். நான் என்ன செய்ய என்று டிரைவர் பேசியது தான் கஷ்டமாக போச்சு. புகார் கொடுத்துள்ளேன்'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications