Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடுமை.. விருதுநகர் அரசு மருத்துவமனை கட்டில் உடைந்து.. பச்சிளம் குழந்தை தலையில் படுகாயம்

விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கட்டில் உடைந்து பச்சிளம் குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: அரசு மகப்பேறு மருத்துவமனையில் கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பரங்கிநாதர் புரத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி. கடந்த சில தினங்களுக்கு முன்பு விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 24ஆம் தேதி முனியசாமி - முத்துலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து தாய் மற்றும் சேய் இருவரும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

கட்டில் உடைந்து குழந்தை காயம்

கட்டில் உடைந்து குழந்தை காயம்


இந்நிலையில், நேற்று குழந்தை வைக்கப்பட்டிருந்த கட்டில் திடீரென உடைந்தது. இதில் கட்டிலில் படுத்திருந்த தாயும், பச்சிளம் குழந்தையும் கீழே விழுந்தனர்.
கீழே விழுந்த குழந்தையின் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதைப்பார்த்து தாய் கதறி அழுதார். அரசு மருத்துவமனைகளின் சேதமடைந்துள்ள கட்டில் உள்ளிட்ட உபகரணங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

உறவினர்கள் குற்றச்சாட்டு

குழந்தையை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நேரமாகியும் குழந்தையை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்காத மருத்துவ நிர்வாகத்தை கண்டித்தும் தரமற்ற கட்டில் போன்றவை மருத்துவமனையில் இருப்பதாக பெற்றோர்கள் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

கட்டில் உடைந்தது ஏன்

கட்டில் உடைந்தது ஏன்

இதையடுத்து குழந்தை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனையின் டீன் சங்குமணி, விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கட்டில் உடைந்ததில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

விசாரணைக் குழு அமைப்பு

விசாரணைக் குழு அமைப்பு

குழந்தையும், தாயும் படுத்திருந்த நிலையில் உடன் வந்த 4 பேர் அமர்ந்ததால் இரும்புக்கட்டில் உடைந்தது என்று கூறினார். இது குறித்து விசாரணை நடத்த தனி குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் சங்குமணி தெரிவித்துள்ளார். அரசு மகப்பேறு மருத்துவமனையில் கட்டில் உடைந்து குழந்தை தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+