உடைந்துபோன ராதிகா.. விருதுநகரில் தோற்றதுமே எக்ஸ்ஸில் போட்ட பதிவு.. அந்த ‛‛பஞ்ச்’’ தான் ‛‛ஹைலைட்’’
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். தோல்வியை தொடர்ந்து ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அதில் கூறிய ‛பஞ்ச் டயலாக்’ ஹைலைட்டாகி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி தொகுதி என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னணியில் உள்ளது.

கடந்த முறை திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வென்ற நிலையில் இந்த முறை மொத்த மாநிலத்தை ஸ்வீப் செய்யும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 22 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலா 2 இடங்களிலும், மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் கட்சி தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.
விருதுநகர் தொகுதியை பொறுத்தவரைக்கும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்பி மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியின் தேமுதிக கூட்டணியின் வேட்பாளராக மறைந்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா, நாம் தமிழர் கட்சியின் சார்பாக கவுசிக் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
மோடியை விளாசிய சு.சாமி.. "சொல்ல சொல்ல கேட்கல.. பாஜகவின் தோல்விக்கு காரணம் இதுதான்.." குமுறல்
இரவு 8 மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் எம்பி முன்னிலையில் உள்ளார். அவர் 3 லட்சத்து 82 ஆயிரத்து 29 ஓட்டுகளை பெற்றுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் உள்ளார். இவர் 3 லட்சத்து 77 ஆயிரத்து 29 ஓட்டுகள் பெற்றுள்ளார். இவர்கள் 2 பேருக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசம் என்பது 5 ஆயிரமாகும். இவர்கள் 2 பேரும் தொடர்ந்து மாறி மாறி முன்னிலை வகித்து வரும் நிலையில் ரிசல்ட் எப்படி மாறப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் இந்த தொகுதியில் போட்டியிட்ட ராதிகா தோல்வியடைந்துள்ளார். அவர் 1 லட்சத்து 63 ஆயிரத்து 834 ஓட்டுகள் மட்டுமே பெற்று 3வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தான் தோல்விக்கு பிறகு பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கணவர் சரத்குமாருடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை பதிவிட்டு தோல்வி பற்றி தெரிவித்துள்ளார்.

8 தொகுதிகளில் நாம் தமிழர் 3வது இடம்.. அனைத்து கட்சிகளுக்கும் தண்ணி காட்டும் சீமான் தம்பிகள்
இதுபற்றி ராதிகா தனது எக்ஸ் பதிவில், ‛‛அனைத்து போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல. அவற்றில் சில போர்கள் போரிட்டவர்களின் பெயர்களை சொல்ல வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகின்றன. இந்த வரியை நான் படித்துள்ளேன்’’ என்று கூறி கைக்கூப்பிய 3 இமோஜிகளை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலரும் ராதிகா சரத்குமாரின் பதிவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்வாக கமெண்ட் செய்து வருகின்றனர். பல்வேறு தரப்பினர் ராதிகா சரத்குமாரின் தோற்றாலும் கூட அவர் நன்கு உழைத்ததாக தெரிவித்து வருகின்றனர். சிலர் அவரது தோல்வியை கொண்டாடும் வகையிலும், கிண்டலடிக்கும் வகையிலும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications