ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!
விருதுநகர்: சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரு தொகுதிகளிலும் ராஜேந்திர பாலாஜி செய்திருக்கும் அரசியல் அவரது ஆதரவாளர்களை உற்சாகமாக்கி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்யை ராஜேந்திர பாலாஜி அடித்துவிட்டதாக பெருமிதம் பேச தொடங்கி இருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கிய பவர் சென்டராக இருந்து வருகிறார். இவரை மீறி விருதுநகர், தென்காசி மாவட்டத்தில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருக்கிறார். இதன் காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் மோதல் ஏற்பட்டது.

தற்போது கெளதமியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, ராஜபாளையம் தொகுதியையும் ஜான் பாண்டியன் பக்கம் திருப்பிவிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாகவே நடிகை கெளதமி பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
இதனை அறிந்து கொண்டே ராஜபாளையம் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு கொடுக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ராஜேந்திர பாலாஜி ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துள்ளார். ஏனென்றால் சாத்தூர் தொகுதி பாஜக பக்கம் சென்றதிலும் ராஜேந்திர பாலாஜியின் அரசியல் உள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சாத்தூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் போட்டியிட பணிகளை மேற்கொண்டு வந்தார். அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணத்தை கூட ஒருங்கிணைத்தது ராஜவர்மன் தான். மீண்டும் சாத்தூர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியிடமும் ராஜவர்மன் பேசி இருந்தார்.
ஆனால் சாத்தூர் எம்எல்ஏ-வாக ராஜவர்மன் இருந்த போது, அவருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் ராஜேந்திர பாலாஜி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி பாஜக பக்கம் தாவினார். இதனால் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதிக்கு மாறுவதால், ராஜபாளையம் தொகுதி நமக்கு வரும் என்று கோபால்சாமி நம்பினார்.
ஆனால் சாத்தூர் தொகுதியை பாஜக பக்கமும், ராஜபாளையத்தை ஜான் பாண்டியனுக்கும் ஒதுக்கி ராஜேந்திர பாலாஜி ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்திருக்கிறார். அதேபோல் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் பவர் சென்டராகவும் ராஜேந்திர பாலாஜி மீண்டும் உருவாகி இருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் நம்பிக்கையாக பேசத் தொடங்கி இருக்கின்றனர்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications