விருதுநகருக்கு வரப்பிரசாதம்.. ஜவுளி பூங்காவுக்கு ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அரசு தந்த குட் நியூஸ்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா விரைவில் வரப்போகிறது.. இந்த பூங்கா பணிகளை மேற்கொள்ள, '"பிஎம் மெகா இன்டக்ரேட்டட் டெக்ஸ்டைல் ரீஜியன்ஸ் அண்டு அப்பேரல் பார்க் தமிழகம்" என்ற சிறப்பு முகமை, 2024 பிப்ரவரியில் துவங்கப்பட்டது.. மேலும், மாஸ்டர் டெவலப்பராக சிப்காட் நிறுவனத்தை, பூங்கா அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு கடந்த வருடம் இறுதியில் நியமித்திருந்தது. இந்நிலையில், ஜவுளி பூங்கா வளர்ச்சி மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.1894 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உட்பட 7 மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது...

அந்வகையில், தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில் பி எம் மித்ரா எனப்படும் பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு சார்பில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது..
விருதுநகர் பூங்கா - ஒப்புதல்
இந்த பூங்காவுக்காக சிப்காட் எனப்படும் தமிழக அரசின் தொழில் முன்னேற்ற நிறுவனம் 1052 ஏக்கர் நிலத்தையும் ஒதுக்கியிருந்தது. இதில் 51 சதவீதம் மத்திய அரசும், 49 சதவீதம் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது.
அங்கு ஜவுளி நிறுவனங்கள் தொழில் துவங்க, மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில், 2,061 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதற்காக 500 கோடி ரூபாயை, மத்திய அரசு மானியமாக வழங்க உள்ளது.
இந்த ஜவுளி பூங்காவில் உள்கட்டமைப்பு பணிகளை துவக்க அனுமதி வழங்குமாறு, ஜவுளி அமைச்சகத்தை தமிழக அரசு வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
முதலீட்டை ஈர்க்க திட்டம்
"முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக குழுவின் தொடர் பேச்சுக்கு பின், மத்திய ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையிலான குழு, விருதுநகரில் 1,894 கோடி ரூபாயில் ஜவுளி பூங்கா அமைக்க அனுமதி அளித்துள்ளது. அங்கு, பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 10,000 படுக்கைகளுடன் பணியாளர்கள் தங்குமிடம் போன்றவை அமைக்கப்படும்.
வரும் 2026 செப்டம்பரில் பணிகள் நிறைவடையும். இப்பூங்கா வாயிலாக, 10,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பானது மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது..
இதனிடையே, ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சரி செய்ய 15 பொதுவான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 5 பூங்கா வளாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்த உள்ளதாகவும், ரூ.10 ஆயிரம் கோடி வரை முதலீடு வர உள்ளதாகவும் கூறப்படுவது இரட்டிப்பு கவனம் பெற்று வருகிறது.
விருதுநகருக்கு வரப்பிரசாதம்
இந்த கட்டுமானப் பணிகள் மட்டும் துவங்கப்படும் பட்சத்தில், கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது..
ஏற்கனவே இந்த பூங்காவில், தையல், டிசைனிங், டை உள்ளிட்ட ஜவுளி தொடர்பான அனைத்து தொழில்களும் இந்த பூங்காவில் இடம்பெற உள்ளதாகவும், இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதிகளும் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது. அந்தவகையில் விருதுநகருக்கு இந்த பூங்கா ஒரு வரப்பிரசாதமாக அமைய போகிறது.
மத்திய அமைச்சகம்
இதனிடையே இதுகுறித்து மத்திய அமைச்சகமும் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.. "விருதுநகரில் 1,052 ஏக்கர் நிலப்பரப்பில், 13 லட்சம் பில்ட்-அப் ப்ளக்-அண்ட்-ப்ளே இடத்துடன், சிறந்த வசதிகளுடன் கூடிய அதிநவீன பூங்கா அமையவுள்ளது.
தொழிலாளர்களின் தங்குமிடத்திற்காக 10,000 படுக்கைகள், ஒரு நாளைக்கு 15 மில்லியன் லிட்டர் (MLD) பொது கழிவுச் சுத்திகரிப்பு நிலையம், 5 MLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை இது கொண்டிருக்கும், என்று மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications