மக்கள் முன்னிலையில் திடீரென கண்ணீர் வடித்த சரத்குமார்... தேற்றிய ராதிகா.. .பரபரப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென மக்கள் முன்னிலையில் சரத்குமார் கண்ணீர் வடித்தார். அப்போது அவர் தந்தையின் நினைவால் கண்ணீர் பெருக்கெடுத்ததாக உருக்கமாக பேசினார்.
Recommended Video
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்த கூட்டணி அமைத்துள்ளார். அவர் மக்கள் நீதி மய்யம், ஐஜேகே மற்றும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் கதிரவனை ஆதரித்து சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில். விஞ்ஞான வளர்ச்சி நாட்டுக்கு தேவை. எங்கள் கூட்டணி மக்களின் முதல் கூட்டணி. ஒத்த கருத்துக்கள் உடையவர்களுடன் நாங்கள் இணைந்தால் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக இருக்க முடியும் என்று கருதினோம்

தூண்டில் தரலாம்
மாற்றத்தை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணிக்கு புதிய முயற்சிக்கு மக்கள் வாய்ப்பு தர வேண்டும். பணம் கொடுப்பவர்கள் தான் ஆட்சி, அரசியலுக்கு வர முடியும் என்றால் அது ஜனநாயகம் இல்லை. இலவசத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் யாருக்கு, எதற்கு தேவை என்பதை தான் எதிர்க்கிறோம். தூண்டில் வாங்கி கொடுக்கலாம் - ஆனால் மீன் பிடித்து கொடுக்க கூடாது.

நல்ல திட்டங்கள் வைத்துள்ளோம்
பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தருவோம் என்று வலியுறுத்தி உள்ளோம். தொலை நோக்குடன் திட்டங்களை வைத்துள்ளோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் . கூட்டத்திற்கு குவாட்டர், பிரியாணி தர மாட்டோம். 2 பேர் இருந்தாலும் தேர்தல் பிரச்சாரம் செய்வேன்திறமை இருந்த காரணத்தினால் தான் கிரிக்கெட் வீரர் நடராஜன் வெளியே தெரிந்தார் அதே போன்று தான் எங்களிடம் திறமை உள்ளது. வாய்ப்பு கொடுங்கள்

ஓட்டுக்காக பணம்
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தயவு செய்து வாங்க வேண்டாம்- காலில் விழுந்து கேட்கிறேன். உங்களிடம் பணம் கொடுத்து விட்டு வேறு வழியில் வாங்கி விடுவோம் என்று அமைச்சர் கூறியுள்ளதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஓட்டுக்கு கொடுக்கும் காசு பிச்சைக்காசு, அது திருட்டு காசு தயவு செய்து வாங்க வேண்டாம்" இவ்வாறு கூறினார்.

சரத்குமார் கண்ணீர்
இதனைத் தொடர்ந்து ராஜபாளையத்தில் மநீமகூட்டணி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் விவேகானந்தனை ஆதரித்தும் சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது மக்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்த சரத்குமார், திடீரென மக்கள் முன்னிலையில் கண்ணீர் வடித்தார். அப்போது அவர் தந்தையின் நினைவால் கண்ணீர் பெருக்கெடுத்ததாக உருக்கமாக பேசினார். அவருடன் வந்த ராதிகா சரத்குமார் அவரை தேற்றினார். இந்த காட்சியை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications