பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குக - ராகுல்காந்தி ட்வீட்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உடனடியாக மீட்பு, நிவாரண உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும் என ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Sattur factory blast: Government to provide immediate rescue RahulGandhi tweet

இதில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேர் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட போது ஒரே அறையில் ஏராளமானோர் இருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல்காந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+