தங்க தமிழ்ச்செல்வன் அல்ல… யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை… ஓபிஎஸ் பொளேர்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிப்புத்தூர்: தேனி மக்களவைத் தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை என்றும் மக்கள் பதில் சொல்வார்கள் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பேட்டியளித்த அவர், தேனி தொகுதி அமமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் களமிறக்கப்பட்டுள்ளது குறித்து பதில் அளித்துள்ளார். மேலும், தேனி மட்டுமின்றி 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Thangatamilselvan Contest in Theni Constituency: People will answer OPS Comment

இதேபோல், பணம் இருப்பதால் முகேஷ் அம்பானி பிரதமராக முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ள தங்க தமிழ்ச்செல்வன், மக்கள் நல்ல தலைமையை மட்டுமே தேர்வு செய்வார்கள் என்றார்.

இதற்கிடையே, தேனி தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் கவலையில்லை என்றும் பிரசார யுக்திகள் அதற்கு பதில் சொல்லும் எனவும் அதிமுக வேட்பாளரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[தமிழ்நாடு எம்பிக்களின் செயல்பாடுகள்]

இந்த நிலையில், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் முருகனுக்கு பதிலாக மயில்வேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த கூட்டத்தில் பெரியகுளம் வேட்பாளர் முருகன் பங்கேற்காத நிலையில் தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+