60 வயது தாத்தாவுக்கு சபலம்.. 83 பவுன் தங்கம், 46 லட்சம்.. திருவாரூர் நந்தினி பக்கா ஸ்கெட்ச்
விருதுநகர்: வெளிநாட்டில் பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து வரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 60 வயது நபருடன் சமூக வலைத்தளம் மூலம் பழகி அவரை மாய வலையில் வீழ்த்தி உள்ளார் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த இளம்பெண். அந்த இளம் பெண் அவரை கண்படி வீடியோ பதிவு செய்து மிரட்டி 83 பவுன் நகைகள், ரூ.46 லட்சம் பறித்துள்ளார். அவர் எப்படி சைபர் கிரைம் போலீசிடம் சிக்கினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 60 வயதாகும் பெருமாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வெளிநாட்டில் பெட்ரோல் நிலையத்தில்(பங்க்) வேலை செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த பெண், தனக்கு 27 வயது ஆகிறது என்றும் மாடலிங் துறையில் பணியாற்றுவதாகவும் கூறி நட்பாகி உள்ளார். முதலில் பெருமாளிடம் அவர் மிகவும் அன்பாக பேசினாராம். இருவரும் முகநூல் மூலம் பலமுறை கருத்துகளை பரிமாறி வந்தார்களாம். ஒரு கட்டத்தில் 27 வயது பெண், பெருமாளை தனது வலைக்குள் சிக்க வைத்துவிட திட்டமிட்டார்.
அதற்கு முன்பாக பெருமாளின் மாத வருமானம், அவரது வீட்டில் உள்ள நகை, பணம், சொத்து விவரங்களையும் கேட்டிருக்கிறார்.அவரும் நட்பாக பழகும் பெண் தானே என்று கூறி எல்லா தகவலையும் கூறியிருக்கிறாராம். இப்படி பழகி கொண்டிருந்த போது, திடீரென ஒரு நாள், அந்த இளம்பெண் தனக்கு சிரமமான சூழ்நிலை இருப்பதாகவும் பணம் தந்து உதவும்படி பெருமாளிடம் கேட்டாராம். பெருமாளும் எவ்வளவு என கேட்டிருக்கிறாராம். அப்போது அந்த பெண், ரூ.5 ஆயிரம் வேண்டும் என கூறினாராம். அவர் கேட்டபடி அத்தொகையை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார் பெருமாள். பதிலுக்கு அந்த பெண், நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் எனக்கேட்டிருக்கிறார்.
அதற்கு அரைகுறை ஆடையுடன் தோன்ற வேண்டும் என அவர் கூறியதாக கூறப்படுகிறது. அதன்படி அப்பெண்ணும் வீடியோகாலில் அரைகுறை ஆடையுடன் தோன்றி குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதை ரசித்த அவரிடம், அப்பெண் மீண்டும் பேசி, நீங்களும் அரைகுறை ஆடையுடன் ஒரு ஆட்டம் போட வேண்டும் என்று கூறினாராம். அடுத்து வரப்போகும் சிக்கலை அறியாமல், பதிலுக்குப் பதில் என நினைத்து அவரும் வீடியோ காலில் அரை நிர்வாணமாக பெருமாள் ஆடியுள்ளார்.. இதை அப்பெண் அப்படியே வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தாராம்.
அந்த வீடியோவை சில படங்களாக மாற்றி பெருமாளுக்கு அனுப்பி உள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த படங்களை உடனே அழித்துவிடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால், நான் கேட்கும்போது எல்லாம் பணம் தரவேண்டும், இல்லை என்றால் இந்த படங்கள், வீடியோ உங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மிரட்ட தொடங்கி உள்ளார். மேலும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் எனவும் கூறி இருக்கிறார். மாடல் அழகியாக வந்தவரின் அந்த பேச்சை கேட்டு பெருமாள் ஆடிப்போனார்.
முதலில் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டுள்ளார். அதை அனுப்பி வந்த நிலையில், பின்னர் லட்சக்கணக்கில் கேட்டு மிரட்டினாராம்.
இதற்கிடையே வெளிநாட்டில் இருந்து சில நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்த பெருமாளிடம், உங்கள் மனைவியின் நகைகளை மொத்தமாக தனக்கு தர வேண்டும், இல்லை என்றால் உங்கள் மனைவியின் செல்போனுக்கு ஆபாச படங்கள் அனுப்பி வைக்கப்படும் என மிரட்டினாராம். இதனால் மனைவிக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 83 பவுன் நகைகளை நைசாக எடுத்து, அப்பெண் கூறிய முகவரிக்கு பார்சல் அனுப்பி உள்ளார். பின்னர் விடுமுறை முடிந்து ஊருக்கு சென்றுவிட்டார். நகைகள் போக அதன் பின்னர், ரூ.46 லட்சம் வரை பல தவணையாக அப்பெண்ணின் வங்கி கணக்கில் அனுப்பினாராம்.
இதனிடையே பெருமாளின் மனைவி திருமண விழாவுக்கு அணிந்து செல்வதற்காக நகைகளை தேடிப்பார்த்தார். அப்போது நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வெளிநாட்டில் உள்ள கணவரிடம் பதறியபடி போனில் கூறியுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்கிற முடிவில் கணவனிடம் கூறியிருக்கிறார் அந்த பெண். அதற்கு அவர், இனியும் அமைதியாக இருக்க வேண்டாம் என கருதி, நடந்ததை மனைவியிடம் கூறி அழுதுள்ளார்.
இதைதொடர்ந்து, விருதுநகரில் நடந்த குறைதீர்க்கும் நாளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் கோபு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையில் தீவிரமாக விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த நந்தினி(27) என்ற பெண்தான் இவ்வாறு பணம், நகைகளை அபகரித்தார் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 83 பவுன் நகைகளையும் போலீசார் மீட்டனர். மேலும் விசாரித்து வருகிறார்கள்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications